பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடிசுவாதித் தினத்தன்று இத்தலம் சென்று வழிபாடு செய்து வருகிறார். அவகாசம் உள்ளவர்கள் அடுத்த ஆடிசவாதியில் அஞ்சைக்களம் சென்று அந்த அப்பனைத் தரிசிக்கலாம். பயணம் சிரமமானதுதான். அதற்குத் தக்க பலன் பெற சிறந்த சிற்ப வடிவங்களோ, கோயில் கட்டிட அமைப்போ இல்லாத குறையும் உண்டு.

இன்னும் இத்தலத்தில் சேரமான் பறம்பு என்று ஒரு இடம் இருக்கிறது. அங்குதான் சேரமான் பெருமாளது அரண்மனை. இருந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு கல்லையும் நட்டு எழுதி வைதிருக்கிறார்கள்.

இன்னும் கோளோற்பத்தி என்ற நூலிலே, இந்தச் சேரமான் பெருமாள், மெக்காவிற்குச் சென்று இஸ்லாமியராகி விட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் வழிவந்தவர்களே இன்றைய மலையாளத்து மாப்பிள்ளைமார் என்று கூறப்பட்டிருக்கிறதாம். நல்ல கதைதான், அறுபத்து மூன்று நாயன்மாரில் சிறந்த ஒருவரையே மதம் மாறியவராகக் கூறுவது! ஆதாரமில்லாத கற்பனைகளுக்குத்தான் கணக்கேது? அதை நம்பவா முடியும்?

வே.மு.கு.வ-8