பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

115

தென் தமிழ்ப் பாவை
செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய்
உலகுக்கோங்கிய
திருமாமணி

என்று ஏத்திப் புகழ்கிறான் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இப்படி - இவளைத் தெய்வமாகவே கொண்டாடும் பான்மையினாலே, இவள் துர்க்கையின் அம்சமாகவே பிறந்தாள் என்று சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார்.

இதனால்தான் கண்ணகியை பிற்காலத்தவர் காளி அம்சமாகவே கொண்டிருக்கின்றனர். கோவலன் கதை என்ற பெயரில் வழங்கும் அம்மானைப் பாடல் ஒன்றில் கண்ணகி திருவொற்றியூரில் வட்டபுரியம்மன் என்ற பெயரால் ஆராதிக்கப்பட்டு வந்திருக்கிறாள் என்றும் தெரிகிறது. இப்படி காளியாகவும் துர்க்கையாகவும் தமிழ்நாட்டில் வழிபடப் பெறும் கண்ணகியே, மலையாள நாட்டில், பகவதியாக வழிபடப் பெறுகிறாள். கொடுங் கோளூரில் உள்ள பகவதியை அங்குள்ள மக்கள் கண்ணகித் தெய்வமாகவே பாராட்டி வழிபடுகிறார்கள். அந்த பகவதி கோயில் கொண்டிருக்கும் பகவதி கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

கொடுங்கோளூர் செல்ல சென்னை கொச்சி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஷோரனூரைக் கடந்து, இரிஞ்ஞாலக் குடா என்ற ஸ்டேஷனில் இறங்க வேணும். அவகாசம் இருந்தால் அந்த ஊரில் உள்ள பரதன் கோயிலுக்குச் சென்று, தவக்கோலத்தில் இருக்கும் பர்தனைக் கண்டு வணங்கலாம். அந்த ஊரிலிருந்து இரண்டு மைல் மேற்கே சென்றால் ஓர் உப்பங்கழி இடையிடும். முன்னர் எல்லாம் இந்த உப்பங்கழியைக் கடக்க, படகுகளைத்தான்