பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வேங்கடம் முதல் குமரி வரை

நம்பியிருக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரம் அங்கே . காத்துக் கிடக்க வேணும்.

இப்போதெல்லாம் அந்த சிரமம் இல்லை. கழியில் நல்ல பாலம் ஒன்று அமைத்து விட்டார்கள். ஆதலால் நடந்து சென்றாலும் காரில் சென்றாலும், எளிதாக அந்தக் கழியைக் கடக்கலாம். எங்கே பார்த்தாலும் ஒரே தென்னஞ் சோலையாக இருக்கும். கொடுங்கோளூர் பகுதிக்கு வந்து சேரலாம். ஒரே ஒரு தெருவைக் கடந்ததும், ஒரு பெரிய மைதானத்தில் வந்து சேருவோம். அந்த மைதானத்தின் மத்தியில் இருப்பதுதான் கொடுங்கோளூர் பகவதி கோயில்

இக்கோயிலை அணுகும்போது வேட்டு வெடிச் சப்தம் பலமாகக் கேட்கும். இதென்ன, தீபாவளி சமயம் இல்லையே இங்கு வேட்டு வெடிப்பானேன் என்று கேட்டால் பகவதிக்கு வேட்டு வெடிப்பதில் நிரம்பப் பிரியம் என்றும், பிரார்த்தனை செய்து கொள்ளுகிறவர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறினால், 10 வெடி 20 வெடி வெடிக்கச் செய்வதாக பிரார்த்தித்துக் கொள்ளுவார்களாம். அதன்படியே சேவார்த்திகள் வேட்டு வெடிக்கிறார்கள் என்பார்கள்.

நமக்கும், நமது யாத்திரையெல்லாம் விக்கினமில்லாமல், நிறைவேற வேணுமே! ஆதலால் நாமும் ஆளுக்கு 4 வெடி என்று வெடிக்கலாம். நாலு வெடிக்கும் அங்குள்ளவர்கள் 4 அணாத்தான் வாங்கியிருக்கிறார்கள். கோயில் வாயிலை குறிப்பிட்ட காலங்கள் தவிர மற்ற நேரங்களில் மூடியே வைத்திருப்பார்கள்.

ஆதலால் கோயில் வாயிலைத் திறக்கும் வரை கோயிலை ஒரு சுற்று சுற்றலாம். சந்நிதிக்குக் கீழ்புறம்