பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பெயரில் வெளியிட்டிருக்கிறார். அவை ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம். நாயன்மார்கள், ஆழ்வார்கள் இவர்களால் பாடப்பட்ட கோயில்களைப் போல், பாஸ்கரனால் எழுதப்பட்ட கோயில்கள் என்று ஒரு தொகுப்பே ஏற்படலாம், நண்பர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தமாஷாக, தென்னாட்டுத் தெய்வங்களெல்லாம் இவரது இல்லமாகிய சித்ர கூடத்தில் 'க்யூ' வரிசையில் நின்று தங்கள் கோயில்களைப் பற்றி எழுதும்படி வேண்டி நிற்கிறது என்று அடிக்கடி சொல்வார். சுந்தரர் கனவில் தோன்றி, தன்னைப் பாடும்படி சொன்ன தெய்வங்கள், பாஸ்கரன் வீட்டில் காத்துக் கிடக்க நேரிட்டது என்றால் அது பெறற்கரிய பேறு தானே?

நண்பருடைய இந்தக் கலையார்வத்தினால் தஞ்சையில் அவர் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய போது, அங்கு காட்டிலும், மேட்டிலும், குளத்திலும், குளக் கரையிலும் கேட்பாரற்றுக் கிடந்த சிலைகளுக்கு ஒரு யோகம் அடித்தது. அவற்றையெல்லாம் எடுத்து வந்து குறைந்த செலவில் அழகுபட அமைத்து, தஞ்சைக் கலைக் கூடத்தை சிருஷ்டித்து அதற்கு பிர்மா ஆனார். எனது நண்டர், ஓய்வு பெற்ற, புதைபொருள் இலாகா முதல்வர் திரு ராமச்சந்திரன், இதன் மதிப்பை (அப்போதைய மதிப்பு,.. இப்போது?) மூன்று கோடி ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார். மதிப்பாரற்றுக் கிடந்த சிலைகளுக்கு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இவரே. ஆனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள இதனைச் சிருஷ்டிக்க இவர் செலவு செய்ததெல்லாம் சில ஆயிரம் ரூபாய்களே. ஒரு வேளை வியாபாரியாக இருந்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம்