பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

சம்பாதித்திருப்பார்! தமிழ் நாடு முழுவதுமே இந்தப் பணிக்காக இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது -

இப்படி, தமிழ் நாட்டில் இவர் செய்திருக்கிற தொண்டு ஏட்டில் அடங்காது. இவர் நல்ல தமிழ் அறிஞர். ஆனாலும் மற்ற தமிழ் அறிஞர்களைப் போல் அல்லாது இந்தியப் பண்பாடு ஒன்றே என்று நினைப்பவர், இந்தியாவின் ஒருமைப்பாட்டைத் தமிழர்களுக்கு விளக்குவதற்காகவே, தமது உடல் நிலையையும் பொருட்படுத்தாது, பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், இரு நண்பர்களுடன், இந்தியா முழுவதும் காரிலேயே சென்று இந்தியப் பண்பாட்டைக் கண்டார். வட நாட்டில், தில்லி, பம்பாய் முதலிய இடங்களில் வெகு அழகாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பல பேச்சுக்களில் விளக்கினார். வடநாட்டுக் கோயில்களையும், கலைகளையும் தமிழர்கள் எல்லோரும் அறிய வேண்டுமென்று, கல்கியில் "வேங்கடத்துக்கு அப்பால் என்ற கட்டுரைத் தொடரை எழுதியிருக்கிறார்.

நண்பர் பாஸ்கரன், ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சிஷ்யர், ஏன், இவரும் ஜட்ஜ் மகராஜனும் டிகேசியின் இரு வாரிசுகள் என்றே சொல்லலாம். அவர் செய்த தமிழ்ப்பணியை இருவருமே தொடர்ந்து செய்தார்கள். பாஸ்கரன் தனக்கென ஒரு பேசும் பாணியை உருவாக்கிக் கொண்டார். நடை வேறு, பாணி வேறு. ஆகையால் ரசிகமணியிடம் தொடர்பு கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு இவரது பேச்சுக்களை ரசிக்க முடிகிறது. இவரது பேச்சுக்களில் புதுமையைக் காண முடிகிறது. - இவர் ரசிகமணியின் நிழலாகத் தென்படுவதில்லை.