பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18. நவ தாண்டவம்

ஷ்ய நாட்டின் பிரசித்தி பெற்ற நடனவித்தகி மாடம் பாவ்லோவா, ஒருநாள் அவள் தனது நடனங்களை ஒரு பெரிய அரங்கிலே ஆடிக் காட்டுகிறாள். நடனங்களை எல்லாம் கண்டுகளித்த ரஸிகப் பெருமகன் ஒருவருக்கு அன்றைய நிகழ்ச்சியில் அந்த அம்மையார் கடைசியாக ஆடிய நடனத்தின் பொருள் விளங்கவில்லை. அதனால் நடனம் முடிந்ததும் அவசரம் அவசரமாக அந்த ரசிகர் கிரீன் ரூமுக்குள்ளேயே ஓடுகிறார். அம்மையாரைக் காண்கிறார்.

"அம்மையே! தாங்கள் கடைசியாக ஆடிய அற்புத நடனத்தின் பொருள் என்ன“ என்று மிக்க ஆர்வத்தோடு கேட்கிறார். அதற்கு அந்த அம்மையார் சிரித்துக் கொண்டே, "அவ்வளவு எளிதாக அந்த நடனத்தின் பொருளை வார்த்தைகளால் சொல்லக் கூடும் என்றால், நான் அதை நடனம் ஆடிக் காட்டியிருக்க வேண்டாம்." என்கிறார். ஆம், ஒரு பெரிய உண்மையைத்தான் மிக எளிதாகக் கேட்ட கேள்விக்கு எதிர்க் கேள்வி போட்டு விளக்கி விடுகிறார் பாவ்லோவா. வெறும் வார்த்தைகளிலே நடனத்தின் பொருளை எல்லாம் சொல்லி விடக் கூடும். என்றால் அதை நடனம் ஆடிக் காண்பிப்பானேன்?

அரங்கம், திரைச்சீலை, பக்க வாத்தியம், உடை அணி என்றெல்லாம் சிரமப்பட்டுத் தேடுவானேன்? சொல்லால் விளக்க முடியாததை எல்லாம் நடனம் ஆடிக்காட்டிவிட