பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

135

முடியும் என்றல்லவா சித்தாந்தப்படுத்துகிறாள் பாவ்லோவா! ஆனால் இந்த பாவ்லோவா பிறப்பதற்கு எத்தனையோ கற்ப கோடி காலங்களுக்கு முன்னாலேயே இந்த. - சித்தாந்தத்தை நிலை நிறுத்தியவன்தானே அகில உலக நாயகனான நடன ராஜன். அந்த நடன ராஜன் ஆடிய நடனத்தையே தாண்டவம் என்றனர் கலைஞர்கள்.

தாண்டவம் எப்படிப் பிறந்தது. தட் தட் என்று நிலத்தைத் தட்டி ஆடுவதால் தாண்டவம் என்று ஆயிற்று என்று கூறுவார் உண்டு. நடனத்திற்கு அதிதேவதையான் சிவபெருமான் தன்னுடைய கண நாதர்களில் ஒருவனான தண்டு என்பவன் மூலமாக, தான் ஆடிய ஆட்டங்களை பரத முனிவருக்குக் கற்பிக்க, தண்டுவின் மூலம் கற்பிக்கப்பட்ட இந்த ஆட்டத்திற்கு தாண்டவம் என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறும் பரதசாஸ்திரம். ஒன்று மட்டும் உண்மை.

இறைவனால் ஆடப்பட்ட ஆட்டமே தாண்டவம் என்று பெயர் பெற்றிருக்கிறது. அதனால் ஆடவர் ஆடும் ஆட்டமே தாண்டவம் என்றும் தீர்மானமாகியிருக்கிறது. பின்னர் அந்த ஆட்டத்தையே பெண் மிக லளிதமாக ஆட, அந்த ஆட்டத்தையே லாஸ்யம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். தாண்டவம் ஆடியவர் சிவபெருமான், லாஸ்யம் ஆடியவள் பார்வதி என்றும் இலக்கியங்கள் கூறி வந்திருக்கின்றன.


சொல்லால் விளக்க முடியாது. தாண்டவ லக்ஷணங்களை, தமிழ் நாட்டுச் சிற்பிகள் கல்லால் விளக்க முற்பட்டிருக்கின்றனர். அது காரணமாகவே கல்லிலும் செம்பிலும் பல நடனத் திருக் கோலங்களை நம் முன் நிறுத்தி வைத்திருக்கின்றனர். சொல்லால் விளக்க முடியாது என்று