பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19. ஆலயங்கள் ஏனையா?

மீப காலத்தில் ஒரு பொருளாதாரப் பேராசிரியரைப் பார்த்தேன். நாட்டிலே பண வீக்கம் குறைவதற்கெல்லாம் பெரிய பெரிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார் அவர். அதே சமயத்தில் பலரிடத்தே காணுகின்ற வறுமையையும் அவர் மறந்தாரில்லை. 'எவ்வளவு பொருள், கோயில் என்றும் கூத்து என்றும் தேவரென்றும், திருவிழா என்றும் விரயமாகிறது. இத்தனை பொருளையும் வைத்து ஒரு கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தினால் மக்களுக்கு எவ்வளவு பலன் தரும்! என்றெல்லாம் விளக்கினார். கடவுளைக் கண்டு தொழுவதற்கு கோயில் என்ற இடம் வேண்டுமா? என்ற பெரிய கேள்வியையே கிளப்பினார்.

கீழான மக்களே கடவுளைத் தண்ணீரில் காண்கிறார்கள் அறிஞர்களோ வானவீதிகளில் கடவுளைக் காண்பார்கள்
கல்லினும், மண்ணிலும், மரத்திலும் கடவுளைக் காண்பவர்கள் அறிவிலிகளே தன் உள்ளத்தின் உள்ளேயே கடவுளைக் காண்பவன் தான் மனிதன்

என்ற வேத உரையைக் கூட மேற்கோள் காட்டினார். அவருடைய எண்ணம் கோவில்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம். இட நெருக்கடியும் தீரும். மக்கள் வாழ்வதற்கு நல்ல வசதியாகவும் இருக்கும். கல்லையும் கட்டையையும் விலைக்கு விற்றாலோ ஏராளமான பணம் சேரும். பொருளாதார நெருக்கடி கூடக் கொஞ்சம் குறையும் என்பது தான். இப்படியெல்லாம் திட்டங்கள் வகுத்து கூறும், அவருடைய திறமையான பேச்சைக் கேட்கக்