பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வேங்கடம் முதல் குமரி வரை

அவர் சொல்லுவதெல்லாம் சரிதானே என்று கூடப் பட்டது எனக்கு.

ஆலயங்கள் ஏனையா?
அபிஷேகங்கள் ஏனையா?
கோலங்கொடிகள் ஏனையா?
கொட்டு முழக்கம் ஏனையா?
பாலும் பழமும் வைத்து நிதம்
பணிந்து நிற்பதேனையா?
சீலம் பேணும் உள்ளத்தைத்
தெய்வம் தேடி வராதோ?

என்றெல்லாம் சிந்திக்க விரைந்தது. என் மனம். உண்மை தானே. எதற்காக இத்தனை கோயில்களைக் கட்டினார்கள் நம் முன்னவர்கள்? எதற்காக இவ்வளவு பொருள்களை விரயம் செய்தார்கள்? கடவுள், கோயில் என்ற இடத்திற்குள் மட்டுந்தானா ஒளிந்து கொண்டிருக்கிறான்? பார்க்கும் இடங்களில் எல்லாம் அவள் பசிய நிறம் காண வில்லையா? கேட்கும் ஒலியிலெல்லாம் அவன் கீதம் இசைக்க வில்லையா? காக்கைச் சிறகினில் அவன் கரிய நிறத்தைப் பார்க்கிறோம். தீக்குள் விரலை வைத்தாலும் அவனைத் தீண்டும் இன்பம் அடைகிறோமே.

இப்படி இருக்க, எங்கும் நிறைந்துள்ள ஏகனுக்கென்று ஒரு தனி இடம் இருப்பானேன்? கடவுள் ஏதோ வானில் இருக்கிறார் என்றோ அல்லது தேவ தேவனாக இருக்கிறான் என்றோ எண்ணிக் கொள்பவர்கள் எண்ணிக் கொள்ளட்டும்.

அவன் நம் நெஞ்சத்துக்குள்ளே இருக்கிறான் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இப்படி நம் உள்ளத்தின் உள்ளேயே இருக்கும் இறைவனுக்கு கோயில் என்ற ஓர் இடம் எதற்கு? கும்பிடுவதற்கு ஒரு குறியீடு எதற்கு? இப்படி எல்லாம் கேட்பவர்களுக்கு பதில் சொல்லத்தானே