பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வேங்கடம் முதல் குமரி வரை

புறத்தில் மேற்கே பார்த்த கோயிலில்தான் இந்த பூவராகர் இருக்கிறார்.

வைணவத் தலங்களுக்குள் இத்தலம் சிறப்பானது. சுயம்பு லிங்கம் என்பது போல, சிற்றுளி கொண்டு பொழியப்படாது தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பர். அவை ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானவாமலை, புஷ்கரம், நாராயணம் என்றும் கூறுவர். இவற்றையே வடமொழியில் 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்' என்பர். இக்கோயில் பிரும்மாண்டமான கோயில். மூன்று மதில்களால் சூழப்பட்டிருக்கின்றது. இன்று இருப்பது இரண்டு மதில்களே. மூன்றாவது மதில் சிதைந்து அதன் அடையாளங்கள் மட்டுமே இருக்கின்றன. கோயில் வாயிலை 150 அடி உயரமுள்ள ஒரு ராஜகோபுரம் அழகு செய்கிறது. இக்கோபுர வாயிலிலே துழைத்த உடனே கோபுரத்தின் மேலே கிழக்கு நோக்கியவராய் வேங்கட வாணன் இருப்பதைக் காட்டுவர்.

வடவேங்கடம் சென்றவர்கள் அறிவார்கள். அங்குள்ள புஷ்கரணியின் மேல் கூரையில் உள்ள ஆழ்வார்களை தரிசித்த பின்னரே வேங்கடவனை தரிசிக்க வேண்டும் என்பதை. அதுபோல இத்தலத்தில் கோபுரத்தில் உள்ள வேங்கடவனை முதலில் தரிசித்த பின்னரே பூவராகனை சேவிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம், ஆதலால் நாமும் படிகள் ஏறி வேங்கடவனைத் தரிசித்த பின்பே மேல் நடக்கலாம். ராஜகோபுரத்தைக் கடந்ததும் நாம் சேர்வது நூற்றுக்கால் மண்டபம்.

இம்மண்டபத்தின் அடிப்பாகம் நல்ல விரிந்து பரந்திருக்கிறது. இத்தனை அகலமாக கல்லாலேயே மண்டபம் அமைந்திருப்பது அழகாக இருப்பதுடன்