பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வேங்கடம் முதல் குமரி வரை

சிறு சந்நிதி இருக்கும். அச்சந்நிதியில் சப்த மாதர்கள் புடை சூழ அம்பிகை எழுந்தருளியிருக்கிறாள். அவளே அம்புஜவல்லியின் அம்சம். பிள்ளை இல்லாதவர்கள் வேண்டிக் கொண்டால், அவர்களுக்கு அருள் பாலிக்கிறாள். அவளையே குழந்தையம்மாள் என்று கூறுகிறார்கள். இவளுக்கு ஆராதனையெல்லாம் செங்குந்த முதலியார்கள் செய்கிறார்கள். அவளையும் வணங்கி விட்டே நாம் கோயிலுக்கு வரலாம்.

வெளியே வருகிறபோது கோயிலில் ராமர் சந்நிதியைக் காணோமே என்று கேட்கத் தோன்றும். அப்படிக் கேட்டால் 'ஒ! இருக்கிறதே' என்று கோவிலுக்கு வடமேற்கு திசையில் உள்ள நந்தவனத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்வர். அங்கு ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் இருப்பார். பரதன் வெண்குடை கவிக்க, சத்ருக்னன் கவரி வீசக் காட்சி கொடுப்பார், அனுமார் அங்கே ராமாயண பாராயணமே செய்து கொண்டிருப்பார்.

இவர்கள் பக்கத்திலேயே தசாவதாரக் கோலங்களில் முதல் இரண்டு அவதாரங்களான மச்ச வடிவும் கூர்ம வடிவையும் காணலாம். கொஞ்சம் ராமர் சீதை திருவடியைக் கூர்ந்து நோக்கினால், இருவரும் அவரவர் வலது காலில் மட்டும் பாதரட்சை அணிந்திருப்பது தெரியும். இருவரது இடதுகால் பாதரட்சைகள் என்ன ஆயிற்று என்று கேட்போம். அர்ச்சகர்களுக்கு அதற்கு சமாதானம் சொல்லத் தெரியாது என்று நான் நினைக்கிறேன். சித்ரகூடத்தில் பரதன் வந்து ராமரது பாதரட்சைகளில் இரண்டை வாங்கிப் போனதாக ராமாயணம் கூறுகிறது அல்லவா? ஆனால் ராமர் அவனிடம் கொடுத்தது அவரது பாதரட்சைகள் தானா? அவர் அறிவார், சீதாதேவி தன்னுடைய பட்டமகிஷி, சஹதர்மிணி. ஆதலால் தன்னுடன் அரியாசனத்திலிருந்து ஆட்சி புரியும்