பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

29

பல படங்களில் இப்பாலத்தைப் : பார்த்துக் - களித்திருக்கிறோம். இந்தப் பாலத்தைப் படம் பிடித்த கலைஞர்கள் எல்லாம் பாலத்தோடு நின்று விட்டார்களே ஒழிய, அதற்கு மேலும் நடந்து பாலத்திற்கு மேற்கே ஒன்றிரண்டு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கோயிலுக்குச் சென்றதாகத் தெரியவில்லை. 1958 - ல் நான் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கு பல பாகங்களில் புதர் மண்டிக்கிடந்தது. பல பாகங்கள் இருட்டடித்தும் கிடந்தது. நாலு வருஷம் கழித்து நான் அங்கு சென்றிருந்த போது, கோயில் புத்தம் புதிதாய் கட்டியது போல் புதுமையுற்றுத் திகழ்கிறது.

இவ்வளவு சிறப்பாக இத்திருப்பணியைச் செய்தவர் யார் என்று விசாரித்தபோது, அங்குள்ள அன்பர்கள், என்னை கோவில் பக்கத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ராஜராஜேஸ்வரிக்கும் ஒரு சிறு கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அக்கோயில் பக்கத்தில் ஒரு சிறு குடிலில் ஒரு சாமியார் இருந்தார். அவர் கௌபீனம் ஒன்றை மட்டும் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரது பக்கத்தில் வில்வ இலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஓர் உடைந்த சட்டியில் திருநீறும் இருந்தது. எண்ணற்ற மக்கள் அங்கு குழுமியிருந்தனர்.

எல்லோரும் அங்குள்ள சாமியார் திருவடிகளில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தனர். விழுந்தவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் வில்வ தளமும் விபூதியும் எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் அவர்களும் ஒரு நயாபைசா முதல் அவர்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு வைத்து வணங்கிக் கொண்டிருந்தனர். அப்படி வணங்கி வில்வதளம் பெற்றுச் செல்பவர்களுக்கு எல்லாம் அவர்களைப் பீடித்திருந்த வியாதி நீங்குகிறது. இப்படி