பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வேங்கடம் முதல் குமரி வரை

தீராத நோய் தீர்த்தருள வல்லானாக அச்சாமியார் அந்தத் திருவலம் என்னும் தலத்தில் வாழ்கிறார். பைசா பைசாவாக அவர் சேர்த்த தொகையை வைத்தே இக்கோயில் திருப்பணி நிறைவேறி இருக்கிறது. .

இன்றுவரை ஐம்பதினாயிரத்திற்கும் மேல் திருப்பணிக்குச் செலவாகியிருக்கிறது, என்று அறிந்த போது அப்படியே மெய்சிலிர்த்தது. வல்லநாதர் இப்படி ஒரு சாமியார் வடிவில் அல்லவா மக்களைத் தொடர்ந்து வந்து அருள் புரிகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. சாமியாரோ மௌனி. அவரை சிவானந்த மௌன சுவாமிகள் என்று மக்கள் அழைக்கிறார்கள்.

கோயில் பிராகாரம், கோபுரம், பாண்டங்கள் எல்லாம் நன்றாய் வர்ணம் தீட்டப்பட்டிருக்கின்றன. மின்சார விளக்குகள் போடப்பட்டிருக்கின்றன. கோயிலுள் நுழைகிற போதே, உள்ளத்தில் ஓர் எழுச்சி உண்டாகிறது.

முன் வாசல் கோபுரம் தெற்கு நோக்கிய வாசலில் இருக்கிறது. அதைக் கடந்து கொஞ்சம் தாழ்ந்த இடத்தில் இறங்கியே கோயிலுக்குள் செல்ல வேணும். அந்தப் பாதையிலேயே வலப்பக்கம் ஒரு சிறுகுளம். இடப் பக்கம்தான் புதிதாகக் கட்டப்பட்ட ராஜராஜேஸ்வரியின் சந்நிதி, அங்கெல்லாம் வணக்கம் செலுத்தி விட்டே. இடைநிலைக் கோபுரத்தைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேணும்.

அங்கு வலப் புறத்திலேதான் வலம் வந்த விநாயகர் கோயில் கொண்டிருக்கிறார். அவரை வரசித்தி விநாயகர் என்றே அழைக்கின்றனர். அவரை வணங்கிவிட்டே மேற்புறமாக நகரவேணும். அந்த மேல் பிராகாரத்தில்தான் ஒரு சிறு கோயிலும் பக்கத்தில் வில்வமரமும் இருக்கிறது. இந்த வில்வமரத் தழைகள்தான் இன்று சிவானந்த மௌன