பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வேங்கடம் முதல் குமரி வரை

காட்டலாமா? அடம்பர் இராமனைக் காட்டலாமா? இல்லை. வழுவூர் கஜ சம்ஹாரனையும் பிக்ஷாடனரையும் காட்டலாமா? இதையெல்லாம் காட்டுவதில் ஒரு சங்கடம் வேறே இருக்கிறதே.

இவர்கள் அமெரிக்கர்களாக இருப்பதால் கோயில்களில் அனுமதிக்க மாட்டார்களே, ஆகவே கோயில் உள்ளே அல்லாமல் பிராகாரத்திலேயே சிறந்த வடிவங்கள் இருக்கும் ஒரு கோயிலையல்லவா காட்ட வேண்டும் என்று பலபல எண்ணினேன். கடைசியில் ஒரு நண்பரது காரிலேயே ஏறிக்கொண்டு கும்பகோணத்தில் அருகே ஒரு கோயிலுள் நுழைந்தோம்.

அக்கோயிலின் ராஜ கோபுர வாயிலே மிகவும் பெரிதாக அகன்றும் உயர்ந்தும் இருந்தது. அந்த வாயிலில் நண்பர்களை நிறுத்திக்கொண்டு சொன்னேன், 'இக் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை அதிசயம் நிகழ்கிறது. கோயில் கோபுரத்திற்கும் கருவறையில் உள்ள லிங்கர் இடையில் உள்ள தூரம் கிட்டத்தட்ட முன்னூறு அடி, இடையில் இரண்டு வாயில்கள், ஒரு கொடிமரம், பலிபீடம், பெரிய நந்தி எல்லாம் உண்டு.

ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 10,11;12 தேதிகளில் {about 'April 24, 25, 26) காலை 6 மணிக்கு உதிக்கின்ற சூரியனின் ஒளி இவ்வாசல் வழியாய் புகுந்து, இடையில் இருக்கும் தடங்கல்களை எல்லாம் கடந்து கருவறையில் உள்ள இறைவன் உருவை ஒளிமயமாக்குகிறது.“ என்று.

இத்தலவரலாற்றில் சூரியனும். இந்திரனும் வந்து இங்கு வழிபாடு இயற்றியிருக்கின்றனர் இவ்வரலாற்றை உண்மை என இன்றைய மக்கள் உணர இப்படி ஒரு