பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. திரிபுவனச் சிற்பங்கள்

ன்றைய உலகம் சினிமா உலகம். சினிமாவில் காதல் காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன என்பதையுமே அறிவோம். பண்டைத் தமிழன் காதல் வாழ்வில் திளைத்தவன். சங்க இலக்கியங்கள் எல்லாம் அந்த வரலாற்றைத் தானே கூறுகின்றன. ஒத்த குலமும் ஒத்த நலனும், ஒத்த அழகும், ஒத்த பண்பும் உடைய தலை மகன் ஒருவனும் தலைமகன் ஒருத்தியும் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி ஒரு பொழிலிடத்தே ஊழ்வினை வசத்தால் தனித்து சந்திக்கின்றனர். காதல் அரும்புகிறது. பின்னர் மலர்கிறது, என்றெல்லாம் கதை விரிகிறது இலக்கியங்களிலே.

இன்றோ கல்லூரிகளிலே, கடற்கரையிலே, சாலைகளிலே, சோலைகளிலே கன்னி ஒருத்தியும் காளை ஒருவனும் சந்தித்து காதலை வளர்க்கிறார்கள் - என்றே சினிமாக் கதைகள் உருவாகின்றன. பெண் சோலை மரங்களுக்கிடையே ஓடுவதும், மல்லிகைப்பந்தரின் கீழே அவளை ஓடிப் பிடித்து விளையாடி காதல் உரையாடுவதும், நாம் நாளும். பார்க்கும் காட்சிகளாக அமைகின்றன. வெள்ளித் திரையில் கொடியடியில் காணும் மடக்கொடிகளாக மங்கையர் நிற்பதைத்தானே வெள்ளித்திரை தெள்ளத்தெளிவுடன் உருவாக்குகிறது.

இந்த கற்பனைக்கெல்லாம் மூலமாய் அமைந்த வடிவங்கள் நம் நாட்டுச் சிற்பக் கலை உலகிலும் உண்டு, ஆம் கொடியடியில் காணும் மடக்கொடிகள் இருவர்