பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வேங்கடம் முதல் குமரி வரை

கல்லுருவில் நிற்கிறார்கள், ஒரு கோயிலிலே. அந்தக் கோயில் தான் திரிபுவனம் கம்ப ஹரேஸ்வரர் கோயில் இந்தப் பெண்களை, ஆம் சிலை உருவில் நிற்பவர்களைப் பார்த்த பின்தான் கவிச்சக்ரவர்த்தி கம்பன்

நஞ்சினும் கொடிய நாட்டம்
அமுதினும் நயந்து நோக்கி
கெஞ்சவே கமலக்கையால்
தீண்டலும், நீண்ட கொம்பர்
தன் சிலம்பு அடியில் மென்பூச்
சொரிந்து, உடன் தாழ்ந்த என்றால்
வஞ்சி போல் மருங்குலார் மாட்டு
யாவரே வணங்கலாதார்?

என்று பாடி இருக்க வேணும். இன்னும் புகழேந்தியும் கம்பனது அடி ஒற்றியே,

பாவையர் கை தீண்டப்
பணியாதார் யாவரே?
பூவையர் கை தீண்டலும்
அப்பூங்கொம்பு - மேவி அவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே.

என்றும் பாடுகின்றான். இந்தப் பெண்வடிவங்களை சிற்ப உலகில் சலபாஞ்சிகைகள் என்று கூறுகின்றனர். தமிழ் நாட்டின் சிற்பக்கலை உலகில் இவ்விரு பெண்களும் ஓர் ஒப்பற்ற சிருஷ்டி என்று கூறினால் அதை ஒருவராலும் மறுக்க முடியாது. அவர்கள் நிற்கின்ற ஒயில், அவர்கள் உடுத்தியிருக்கும் உடை, அணிந்திருக்கும் ஆபரணங்கள் எல்லாமே அழகுக்கு அழகு செய்கின்றன.

இன்னும் கூந்தலை வாரி முடித்து, அவைகளைச் சுற்றி முத்துமாலைகளைக் கோத்துக் கட்டி, அந்தக் கொண்டைகளிலே மகரிகைகளை அணிந்து, சர்வாலங்கார சோபிதை