பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வேங்கடம் முதல் குமரி வரை

அவற்றை முறையே தோரணத் திருவாயில், திருமாளிகைத் திருவாயில், திரு அனுக்கன் திருவாயில் என்கின்றனர், இவற்றை எல்லாம் கடந்து உள்ளே சென்று மூலக் கோயிலை ஒரு சுற்று சுற்றினால் கருவறை மேலே: எழுந்துள்ள ஒரு பெரிய விமானத்தையுமே காண்போம்.. இந்த விமானம் தஞ்சைப் பெரு உடையார், கங்கை. கொண்ட சோனீச்சுரத்தார் கோயில் விமானங்களைப் போல் உயரமோ காத்திரமோ உடையது அல்ல என்றாலும், அழகில் சூறைந்ததல்ல. இதனையே சச்சிதானந்த விமானம் என்பர். விமான தரிசனம் செய்து கொண்டே மேலப் பிரகாரத்துக்கு வந்தால், அங்கே மேற்கே பார்த்த கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். நான் கண்ட லிங்கோத்பவர்களில் எல்லாம் அழகு வாய்ந்த வடிவம் இது ஒன்றேதான். பொங்கழல் உருவன் அவன் என்பதைக் காட்ட, அந்த வடிவத்தில் சுடர் விடும் பல சுடர்களுக்கு உள்ளேயே இறைவனைக் காட்டியிருக்கிறான் சிற்பி.

இனி கோயிலுள் சென்று நடுக்கம் தீர்த்த பெருமானாம் கம்பகரேஸ்வரனைத் தரிசித்துவிட்டு திரும்பும் பொழுது, செப்புச்சிலை வடிவில் நிற்கும் பிக்ஷாடனர் திருக் கோலத்தையுமே காணலாம். சோழர் காலத்துச் செப்புப் படிமங்களில் சிறந்த ஒன்று அது. சொல்லாதன எல்லாம் சொல்லித் தொடர்ந்து நம்மை ஆளாக கொண்டு, நம் அன்பையும் ஆணவத்தையும் பிக்ஷை கேட்கும் அந்த அடிகளை வணங்கிய பின் வடப்பக்கம் உள்ள அறம் வளர்த்தாளையும் வணங்க வேண்டும்.

அதற்குப் பின் நாம் சரபர் சந்நிதியில் நுழைந்தால் அங்குதான் நாம் காணவந்த கன்னியர் இருவர் நிற்பர். அவர்களைக் கண்டு அவர்கள் அழகில் மயங்கி நம் உள்ளங்களைப் பறிகொடாதவாறு நிமிர்ந்து நோக்கினால்,