பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

41

சரப மூர்த்தியைக் காணலாம். அது என்ன சரபமூர்த்தி என்கிறீர்களா? சரபர் சிவனது அஷ்டாஷ்ட மூர்த்தங்களில் ஒன்று என்பதைப் பலர் அறிவார்கள். அவர் எப்படித் தோன்றினார், எதற்காகத் தோன்றினார் என்று சொல்ல வேண்டாமா? நமக்குத் தெரியும், மகாவிஷ்ணு இரணியனை அழிக்க பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் , உள்ள நரசிம்ம வடிவம் எடுத்தார் என்று.

இரணியன் உடல் கிழித்து உதிரம் குடித்ததும் அவருக்கு ஒரு வெறியே ஏற்பட்டு விடுகிறது. அந்த வெறியை அடக்க சிவபிரானே சரபர் வடிவில் வந்து அதனை ஒடுக்குகிறார். பாதி சிங்க வடிவிலும், பாதி பறவை வடிவிலும் வந்தவரையே சரபர் என்கிறோம். நரசிம்மனை அடக்க இறைவனே சரபனாக வந்தான் என்று கொள்வது வைஷ்ணவ பக்தர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் எல்லா மூர்த்திகளும் தோன்றி நின்று ஒடுங்கும் இறைவன் ஒருவனே, அவனே நரசிம்மன், அவனே கம்பகரேஸ்வரன், அவனே சரபன் என்று மட்டும் உணர்ந்து கொண்டால் உள்ளத்தில் விகற்பங்கள் ஒன்றும் தோன்றாது. இக்கோயிலில் மூலவராம் சரபரை விட, உத்சவராக சிறிய வடிவில் செப்புப் படிமமாக இருப்பவரே மிக்க அழகு வாய்ந்தவர். சிற்பக் கலை உலகில் அதிசயமானவரும் கூட!

இத்தனை நல்ல சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டதுதான் திரிபுவனம் கோயில். இக்கோயிலை - மூன்றாம் குலோத்துங்கன் என்னும் திரிபுவனச் சக்ரவர்த்தி பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே கட்டியிருக்கிறான். சோழர் கோயில் கற்பணிகளிலே ஒரு முக்கியமான மைல் கல் இக்கோயில். இந்தத் திரிபுவனச் சக்ரவர்த்தி விரும்பியபடியே இவனது முதல் அமைச்சராக