பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. திருக்கண்ணமங்கை

த்துப் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருநெல்வேலியில் ஒரு நடன நிகழ்ச்சி. அங்கு நடந்த நடன நாட்டியங்களைக் காண நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். சென்று முன் வரிசையில் உட்கார்ந்திருந்தோம் பஸ்மாசுர மோகினிக் கதையை நடனம் ஆடிக்காண்பித்தார்கள் நடிகர்கள், அதை அடுத்து ஒரு நிகழ்ச்சி, கஜேந்திர மோக்ஷம் என்று கண்டிருந்தது, நிகழ்ச்சி நிரலில். பஸ்மாசுர மோகினியில் பஸ்மாசுரன், சிவன் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு எல்லோரும் மேடையில் தோன்றி நடனம் ஆடியது போல இந்த கஜேந்திர மோக்ஷத்தில் கஜேந்திரன், முதலை, கருடன், மஹாவிஷ்ணு எல்லோருமே மேடை மீது தோன்றப் போகிறார்களோ என்று எண்ணினோம்.

கருடன், மஹா விஷ்ணு வேஷத்தை வேண்டுமானால் மனிதர்களே போட்டுக் கொள்ளலாம். இந்த யானை, இந்த முதலையாக எல்லாம் மனிதர்கள் தோன்ற முடியுமா என்ன? ஏதோ பொம்மையை வைத்துத் தான் நாடகம் நடத்த முடியும்; கதையை ஓட்ட முடியும் போலும் என்று கருதினோம். ஆனால் நடந்தது எல்லாம். நாங்கள் நினைத்தபடி அல்ல.

ஒரே ஒரு நடிகர் மேடை மீது தோன்றினார். பின்னணி வாத்தியங்கள் அமைதியாக ஒலித்தன. மேடை மீது நின்ற நடிகர் இரண்டு கைகளையும் நீட்டி, அவைகளின் மூலமாக் நீர். நிறைந்த தடாகத்தில் அலை வீசும் மெல்லிய