பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வேங்கடம் முதல் குமரி வரை

யடிக்கும் சிலை ஒன்றும் இங்கு உண்டு, ஆதிசேஷனை நினைத்தால், அவன் விரித்த படுக்கையில் சுகமாகப் படுத்து, அறிதுயில் கொள்ளும் அனந்தசயனன் தான் ஞாபகத்துக்கு வருவான். “பாற்கடலில் பாம்பணை மேல் பையத்துயின்றான். பரமன்" என்பது தானே கலைஞன் கற்பனை.

ஆனால் இங்குள்ள பரமனோ, ரொம்பவும் உஷாராகப் படுக்கையை விட்டு, எழுந்தே உட்கார்ந்திருக்கிறான். பாயாகச்சுருண்டு கிடந்த பாம்பே இங்கு கோப்புடைய சீரிய சிங்காசனமாக அமைந்து விடுகிறது, இந்த வைகுண்ட நாதனுக்கு. ஒரு காலை ஊன்றி, ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்திருக்கும் தோற்றத்திலே ஒரு காம்பீர்யம். ஊன்றிய காலின் மேல் நீட்டிய திருக்கரம், அவன்றன் உல்லாசத்தையே காட்டுகிறது. சங்கு சக்ரதாரியாய் திருமாமணிமகுடம் தாங்கி, புன்னகை தவழ இருக்கும் இந்த வைகுண்டநாதனின் திருஓலக்கம் அழகுணர்ச்சி உடையார் காணும் கலைச்சிகரம். இன்னும் இது போன்ற பல சிற்ப வடிவங்கள். ஆம் இக் கோயிலையே ஒரு நல்ல கலைக் கூடமாக அமைத்து வைத்து விட்டார்கள் நம் நாட்டுச் சிற்பிகள்.

இப்படியே கண்ணமங்கைக் காராளனைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீரே. இங்குள்ள தாயாரைப் பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே என்று தானே நினைக்கிறீர்கள். நான் மட்டு மென்ன, இந்தக் கண்ண மங்கை பக்தவத்ஸலனைப் பாடிய அந்தத் திருமங்கை ஆழ்வாரே, அங்குள்ள அபிஷேக வல்லித் தாயாரைப்பாட மறந்து விட்டாரே!

வண்டமரும் மலர்ப்புன்னை .
வரிநிழல் அணி முத்தம்
தென் திரைகள் வரத்திரட்டும்