பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வேங்கடம் முதல் குமரி வரை

அன்பில் என்ற ஒரு சிறு ஊர் கொள்ளிடகரையிலே இன்றைய லால்குடி என்னும் திருத்தவத்துறை ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஊர் சிறியதே என்றாலும் நல்ல சரித்திரப் பிரசித்தி உடைய ஊர். அன்பில் கிராமத்தில் புதை பொருளாகக் கிடைத்த செப்பேடுகள் சோழ மன்னனது சரித்திரத்தையே உருவாக்க மிகவும் உதவியிருக்கிறது.

மேலும் அன்பில் அநிருத்தர், அந்த சுந்தர சோழன் என்னும் முதல் பராநந்தகனது அமைச்சராக இருந்து பெரும்புகழ் எய்திய வராயிற்றே. அந்த அன்பில் என்ற தலத்திலே, ஆலந்துறை என்ற ஒரு கோயில். அங்கு கோயில் கொண்டிருக்கிறார் சத்தியவாகீசன், துணைவி சௌந்திர நாயகியுடன். சத்திய லோகத்து பிரமனும் வாகீசரும் பூசித்த காரணத்தால் சத்திய வாகீசர் என்று பெயர் பெற்றுமிருக்கிறார்கள்.

பாலறாவாயராம் அந்த சீர்காழிப் பிள்ளை ஞான சம்பந்தர், தலம் தலமாகச் சென்று, ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள மூர்த்திகளைப் பாடிப்பாடி நடந்து கொண்டிருக்கிறார்.

அவர் இந்த அன்பில் ஆலந்துறைக்கும் வந்திருக்கிறார். வந்தவர் கொள்னிடத்தின் தென் கரைவழியாக வந்திருக்கிறார். கொள்ளிடத்திலோ பெருவெள்ளம். ஆற்றைக் கடக்கப் பாலமோ, பரிசிலோ இல்லை,

அந்தத் தென்கரையில் நின்று - பார்த்தவருக்கு வடபக்கம் நீண்டுயர்ந்த கோபுரத்தோடு கூடிய கோயில் தென்பட்டிருக்கிறது. ஆதலால் கொள்ளிடத்தின் தென் கரையில் நின்றே பாடியிருக்கிறார்.

கணை நீடு எரிமார் அரவம் வலரவில்லாய்
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

என்று பாடத்துவங்கியிருக்கிறார். இந்த பாட்டு ஆலந்