பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. வேலுக்குரிச்சி வேட்டுவன்

ன்றைய இலக்கிய உலகம் சிறுகதை உலகம். சிறுகதைகள் பெரும்பாலும் காதல் கதைகளாக இருப்பதையே பார்க்கிறோம். ஏதோ பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த லைலா மஜ்னூ, அனார்க்கலி முதலிய கதைகள்தாம் தமிழ்நாட்டின் காதல் கதைகள் என்றில்லை. அதற்கும் எவ்வளவோ காலத்திற்கு முந்தியே தமிழகத்தில் அமரத்வம் வாய்ந்த காதல் கதைகள் இருந்திருக்கின்றன. சங்க இலக்கியங்கள், அகத்துறைப் பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒரு காதல் கதைதானே. அவைகளையும் தூக்கி அடிக்கும் வகையில் புராண இதிகாசங்களில் வரும் சீதா கல்யாணம், ருக்மணி பரிணயம், வத்சலா கல்யாணம், வள்ளித் திருமணம் எல்லாம் அமரத்வம் வாய்ந்த காதல் கதைகள் அல்லவா?

வடமொழிக் கவிஞனான வான்மீகி, சீதையை ராமன் பெற்றது, வில்லொடித்து வெற்றிப் பரிசாக என்று கூறினால், அக்காவியத்தைத் தமிழாக்கிய கம்பன், சீதா கல்யாணத்தையும் ஒரு காதல் கதையாக அல்லவோ மாற்றியிருக்கிறான்! இந்தக் கதை கூட வடநாட்டிலிருந்து தென்னாடு வந்ததே. ஆனால் தமிழ்க் கடவுளான முருகன், கதை ஓர் அற்புதமான காதல் கதை அல்லவா? எத்தனை தரம் கதையாகக் கேட்டாலும், படமாகப் பார்த்தாலும் அலுப்புத் தட்டாத அமர கதையாக அல்லவா இருக்கிறது!

இந்தக்கதையிலே கூட ஒரு சிறப்பு. சூரபதுமனை சம்ஹரித்து, தேவர் துயர் துடைத்ததற்கு வெற்றிப் பரிசாக,