பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வேங்கடம் முதல் குமரி வரை

நல்ல ராஜ கம்பீர நாடாளும் நாயகனுமாக அல்லவா அவன் மாறி விட்டான். இந்த நாயகனைக் கண்டு நங்கை வள்ளி காதல் கொண்டு நின்றதில் வியப்பில்லைதான்!

இந்த வேட்டுவ முருகனது ஒரிஜினல் வடிவினையும், கவசம் அணிந்த கவின் பெறு வனப்பினையும் காண நீங்கள் எல்லாம் செல்ல விரும்புவீர்கள். சொந்தக்கார் உள்ளவர்கள் மட்டுமே சௌகர்யமாகச் செல்லலாம். இல்லை என்றால் இரண்டு மைலாவது நடக்கக் காலில் திறன் இருக்க வேண்டும். மலை ஏறும் சிரமமும் கொஞ்சம் உண்டு. ஆனால் அத்தனை சிரமமும் இல்லாமலேயே அந்தக் கோலங்கள் இரண்டையும் நீங்கள் காணுகிறீர்கள், பக்கத்தில் உள்ள படங்களிலே இந்த வேட்டுவனை

வள்ளிக் கிசைந்த
மணவாளன் வேட்டுவனாய்
அள்ளிக் கொளும் பேர்
அழகுடனே - துள்ளுகின்ற
கோழியினைக் கையிடுக்கி
கொல்லிமலைச் சாரலிலே
வாழுகின்றான். சென்றே வணங்கு!

என்றே நான் கூறினால், 'சரி' என்றுதானே தலை அசைப்பீர்கள் நீங்கள்?