பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. நவ திருப்பதி

ரு பக்தர், நம்மாழ்வாரது திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாடிப் பாடித் திளைத்தவர். நம்மாழ்வாரது அவதாரத் தலமான திருக்குருகூரையும், அங்கு ஆழ்வார் தங்கியிருந்த புளிய மரத்தையும், அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆதி நாதரையும் பற்றி நிறைய அறிந்திருக்கிறார்.

அந்தக் குருகூர் திருநெல்வேலி மாவட்டத்திலே தண்பொருநை என்னும் தாமிரபரணி நதிக்கரையிலே இருக்கும் ஒரு சிறிய ஊர் என்றும், நம்மாழ்வார் அவதரித்த நாளிலிருந்து அந்த திருப்பதிக்கு ஆழ்வார் திருநகரி என்று பெயர் வழங்கி வருகிறது என்பதையும் கேட்டிருக்கிறார். அந்த பக்தருக்கு ஓர் ஆசை, அந்தக் குருகூருக்குச் செல்லவேண்டும், அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆழ்வாரையும், ஆதிநாதரையும் வணங்கவேண்டும் என்று, சம்சார பந்தங்களில் சிக்கிச் சுழலும் பக்தருக்கும் அதற்கு நாளும் பொழுது, வாய்க்க வில்லை. பல வருடங்கள் கழிகின்றன. கடைசியாக ஒரு நாள் வசதி பண்ணிக்கொண்டு ரயில் ஏறி திருநெல்வேலியில் வந்து இறங்குகிறார். அப்போது திருகுருகூருக்கு ரயில் போடப்படவில்லை. பஸ் வண்டிகளும் இன்று ஓடுவது போல் ஓடவில்லை. டாக்சி கார்களே கிடையாத காலம் அது. இதையெல்லாம் ஈடு செய்யத்தான் அவரிடம் நிறைய ஆர்வம் இருக்கிறதே.

அந்த ஆர்வத்தையே துணையாகக் கொண்டு, வழி விசாரித்துக் கொண்டு, திருநெல்வேலியிலிருந்து கிழக்கு தோக்கி நடக்கிறார். கிருஷ்ணாபுரம், ஜயதுங்கன் நல்லூர்,