பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

79

இதைக் காணுகின்ற பேறு எளிதில் சித்திக்கக் கூடியதா என்ன, என்று ஒரே ஆனந்த வெறியில் ஆடிப்பாடவே ஆரம்பித்து விடுகிறார். அப்படி ஒரு வெறியை பக்தர் ஒருவருக்கு உண்டாகிய திருப்பதி தான் ஆழ்வார் திருநகரி என்னும் குருகூர்.

ப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூவர் முதலிகளால் பாடப்பெற்ற தலங்கள் 274 என்று ஒரு கணக்கு. ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட திருப்பதிகள் 108 என்றும் அறிவோம். சமயகுரவர்கள் பாடிய தேவாரங்கள் முழுவதும், ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் முழுவதும் நமக்கு கிடைத்து விட்டன என்று உறுதி கூற முடியாது. ஆதலால் பாடல் பெறாத பதிகள் என்று நாம் எண்ணும் பல தலங்கள் பாடல்கள் பெற்றிருந்திருக்கலாம் என்று எண்ணவும் இடமுண்டு. என்றாலும் பாடல் பெற்ற பதிகளுக்கு ஒரு சிறப்பு உண்டு.

அதிலும் நம்மாழ்வார் பாடிய பதிகள் என்றால் கேடகவா வேண்டும். பாண்டிநாட்டு வைணவ திருப்பதிகள் பதினெட்டு என்றால், அதில் ஒன்பது தாமிரபரணி நதிக்கரையிலே குருகூராகவும், அதைச்சுற்றிய திருப்பதிகளாகவும் இருக்கின்றன. அவைகளையே நவதிருப்பதிகள் என்று வைணவ உலகம் போற்றுகிறது.

இத்திருப்பதிகளை தரிசிப்பதில் ஒரு பெரிய புண்ணியம் உண்டு, உள்ளத்துக்கு ஒரு மகிழ்ச்சியும் ஒரு தெம்பும் உண்டு என்று அறிகிறபோது நமக்குமே அத் திருப்பதிகளை தரிசித்து விட வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் எழுவது இயற்கை. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று வைணவ பக்தர்கள் கால்நடையாகக் காலையிலேயே புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம் முதல் திருகோளூர் வரை எட்டுத்திருப்பதிகளுக்கும் சென்று அங்குள்ள