பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

89

தென் தமிழ் நாட்டை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில், கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் விமானத்திற்குச் சிகரம் இல்லை. அதில் கலசமும் இல்லை. இதை எல்லாம் விட கருவறையில் ராமர், லக்ஷ்மணர், சீதை சிலைகளையே காணோம். அவைகளை யாரோ உடைத்து எறிந்திருக்கிறார்கள். உடைந்த துண்டுகள் மட்டும் கோயில் பிராகாரத்திலே கிடக்கின்றன.

இந்த இடத்தில்தான் சடாயுவுக்கு ராமன் ஈமக்கடன் செய்தானா என்று கேட்கத் தோன்றும். இக்கேள்விக்கு விடை பெற, ஊரை அடுத்துள்ள ராமலிங்கர் கோயில் பக்கம் போக வேணும். இக்கோயில் நல்ல நிலையில் இருக்கிறது.

அங்குதான் ராமர் பூஜித்த ராமலிங்கரும் பர்வத வர்த்தினியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இக் கோயிலுக்கு வடபுறம் ஒரு சிறு கோயில். அக்கோயிலிலே ராமாவதாரத்தின் மூலமூர்த்தியான ஸ்ரீநிவாசப் பெருமாள் நிற்கிறார். அவர் பிண்டம் போடுவது போல் வலதுகையை மடக்கி வைத்துக்கொண்டு நிற்கிறார்.

இந்த வடிவினைப் பார்த்த பின் நமது சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்து விடும். இதுதான் உண்மையிலேயே சடாயுகுண்டம், சடாயுதீர்த்தம் எல்லாம். இந்தத் தாமிரபரணிக் கரையிலேதான் ராமன் தெய்வ மரணம் உற்ற சடாயுவுக்கு பிதுர்க்கடன்களை எல்லாம் செய்திருக்கிறான்.

பின்னர் பக்தர்கள் விருப்பப்படியே அங்கேயே எழுந்தருளியிருக்கிறான். பதிநான்கு வருஷம் காட்டிடையே வாழ்ந்த அந்த சக்கரவர்த்தி திருமகனான ராமனை காட்டு ராமன் என்றும் அவன் கோயிலைக் காட்டு ராமர்