பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. பெருங்குளத்து மாயக் கூத்தர்

கூத்தன் என்றதுமே நம் எண்ணத்தில் வருவது ஆனந்தக் கூத்தாடிய நடராஜ மூர்த்தம்தான். இலக்கிய வரலாறுகளிலே சிவபெருமான் ஆடிய கொடு கொட்டி, பாண்டரங்கம் முதலிய கூத்துகளைப் போலவே கண்ணனும், அல்லியம், மல்குடம் முதலிய ஆட்டங்களை ஆடினான் என்பது குறிக்கப்படுகிறது. இன்னும் முருகன், துர்க்கை, கொல்லிப் பாலை, இந்திராணி முதலியோர் ஆடிய கூத்துகளும் விவரிக்கப்படுகிறது. இத்தனைக்கும் மேலே மாயனர்ம் பரந்தாமனே ஒரு மாயக் கூத்தையும் ஆடி மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றிருக்கிறான் என்கிறபோது, அந்த வரலாற்றை அறிய ஆவல் ஏற்படுவது சகஜம்தானே! அந்த வரலாறு இதுதான்.

தண் பொருநை என்னும் தாமிர பரணியின் வடகரையிலே குளந்தை என்று ஒரு சிற்றூர். அங்கே கோயில் கொண்டிருப்பவர் வேங்கடவாணர். அவரிடம் ஆறாத பக்தி கொண்டிருப்பவர் வேதசாரர் என்ற அந்தணர். அவரும் அவர் மனைவி குமுததுவதையும் இல்லறம் நடத்தி வந்தனர்.

அவர்களுக்கு கமலவதி என்று ஒரு மகள் பிறந்து வளர்ந்து வந்தாள். இந்த நிலையில் ஓர் அரக்கன் அங்கு வந்து வேதசாரரின் மனைவியைக் கவர்ந்து சென்று விடுகிறான். மனைவியை மீட்க வழியறியாது. திகைக்கிறார். தான் வணங்கும் ஸ்ரீநிவாசனிடமே விண்ணப்பித்துக் கொள்வதைத்தவிர வேறு செய்ய அறியாது வாழ்கிறார். ஸ்ரீநிவாசனும், அவனது ராமாவதாரத்தில் தன்,