பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

93

பெயருக்கேற்ப பெரிய ஏரி - குளம் ஒன்றிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து செல்லும் வழியே பல குளக்கரைகள் வழியாகத்தான் செல்கிறது.

ஒரு பக்கம் நீர் நிறைந்த ஏரிகளும், ஒரு பக்கம் பரந்த நெல்வயல்களுமாக கண்ணுக்கு இனிய காட்சி அளிக்கும். இத்தலம், ஆழ்வார் பாடிய நவதிருப்பதிகளுள் ஒன்று. அந்த நவதிருப்பதிகளில் தாமிரபரணியின் வடகரையிலிருப்பவை ஆறு. அதில் இது மேற்கே இருந்து நான்காவது திருப்பதி, இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பரந்தாமனாம் மாயக் கூத்தனை,

கூடச் சென்றேன் இனி என் :கொடுக்கேன், கோல்வளை நெஞ்சத்
தொடக்கமெல்லாம்
பாடற்று ஒழிய, இழந்து
வைகல் பல் வளையார் முன்
பரிசலிந்தேன்
மாடக் கொடி மதின் தென் குளந்தை
வண் குடபால் நின்ற
மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்ந்த
வெல்போர் ஆழி
வலவனை ஆதரித்தே -

என்று பாடி மகிழ்ந்திருக்கிறார் நம்மாழ்வார். இம்மாயக் கூத்தனையும், இத்தலத்தையும் பற்றி இவர் பாடிய பாட்டு இந்த ஒரே பாட்டுத்தான்.

இவ்வூரையடைந்து, குளக்கரையையும் கடந்து, சந்நிதித் தெரு வழியாக மேற்கு நோக்கி நடந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம். கோயில் வாயிலில் ஒரு சிறு கோபுரம் உண்டு. அதனை அடுத்தே பந்தல் மண்டபம். அம் மண்டபத்திலேயே திருமஞ்சனக் குறடு. இந்த மண்டபத்தில் நுழையும் முன்பே, தென்பக்கம்