பக்கம்:வேட்டை நாய்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வேட்டை நாய்


விட்டது. ஐந்தாறு ஆண்டுகளாகக் கவனிக்காமல் விடுபட்டுப்போன வேலைகளை இப்போது தான் அவசர அவசரமாகக் கவனித்து வருகிறார், அரசர். “நம் தங்கையையும் தங்கை மகனையும் காணவேண்டும். அவர்களுக்கு ஆறுதல் கூறி நம்முடன் இங்கு அழைத்துவர வேண்டும்” என்று அரசர் நினைத்தார். ஆனால், வேலை மிகுதியால் நினைத்தபடி உடனே போக முடியவில்லை. குறைந்தது ஒன்றிரண்டு மாதங்கள் சென்றுதான் போக முடியும் போல் தோன்றியது.

அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவனுக்கு வயது 14; அடுத்தவனுக்கு வயது 11; மூன்றாவது பையனுக்கு வயது 9. மூவரும் ஹாக்கி விளையாடுவதில் நிபுணர்கள்! தினந்தோறும் காலையிலும் மாலையிலும் அரண்மனைக்கு அருகேயுள்ள மைதானத்தில், மற்ற பிரபுக்களின் குழந்தைகளுடன் ஹாக்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அரசரைப் பற்றியும், அவருடைய குழந்தைகளைப் பற்றியும் ஒரளவு தெரிந்து வைத்திருந்தார், ஒரு வயோதிக வியாபாரி. அவர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஸெதாந்தா இருக்கும் ஊருக்கு வியாபார விஷயமாக வருவார். அப்படி வரும்போதெல்லாம் அவர் ஸெதாந்தாவையும் அவன் அம்மாவையும் பார்க்காமல் திரும்ப மாட்டார். பார்க்கும்போது, அரசரைப் பற்றியும், அவருடைய குழந்தைகளைப் பற்றியும் தமக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் கூறுவார். ஸெதாந்தாவும் அவன் அம்மாவும் ஆவலோடு கேட்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/12&oldid=499315" இலிருந்து மீள்விக்கப்பட்டது