பக்கம்:வேட்டை நாய்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

17

 கண்டார், அரசர், அந்தக் கூட்டத்தில் ஸெதாந்தா சுறு சுறுப்பாகவும், உற்சாகத்துடனும் ஆடுவதைப் பார்த்தார். உடனே, அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

பக்கத்திலிருந்த பிரபுவிடம், அதோ பாரும், “அந்தப் பையன் யார் தெரியுமா?” என்று கேட்டார்.

பிரபு சிறிது நேரம் அவனைப் பார்த்துவிட்டு, “ஆம் அரசே, அவன் யார்? புதுப் பையனாக இருக்கிறானே!” என்று கேட்டார்.

“உமக்குப் புதியவன்; ஆனால், எனக்கு அவன் உறவினன். என் தங்கை மகன்தான் அவன்.”

இதைக் கேட்டதும் பிரபு மிகவும் ஆச்சரியத்துடன், “நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது. பையனைப் பார்த்ததுமே, இவன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பானோ!” என்று சந்தேகப்பட்டேன். நான் நினைத்ததில் தவறே இல்லை. தங்கை மகன் வருங்காலத்தில் பெரிய வீரனாக வருவான். சந்தேகமே இல்லை... “அது சரி... அரசே, விருந்துக்கு அந்தப் பையனையும் அழைத்துச் செல்ல நான் விரும்புகிறேன். அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்டார்.

“உமது விருப்பம்போல் செய்யலாம்” என்றார், அரசர்.

உடனே பிரபு, வண்டியை நிறுத்தச் சொன்னார் வண்டி நின்றது. “ஸெதாந்தா! ஸெதாந்தா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/19&oldid=500573" இலிருந்து மீள்விக்கப்பட்டது