பக்கம்:வேட்டை நாய்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வேட்டை நாய்


என்று அரசர் அழைத்தார். ஸெதாந்தாவின் காதுகளில் அரசரின் குரல் விழவில்லை; அவன் தான் மும்முரமாக ஹாக்கி விளையாயாடிக் கொண்டிருக்கிறானே!

“ஸெதாந்தா உன்னை அரசர் அழைக்கிறார். அதோ பார்!” என்று மற்றவர்கள் கூறியபோது தான் ஸெதாந்தாவுக்கு அரசர் தன்னை அழைக்கிறார் என்பது தெரிந்தது. உடனே, ஆட்டத்தை நிறுத்திவிட்டு அந்தக் குதிரை வண்டியை நோக்கி அவன் ஓடி வந்தான்.

“ஸெதாந்தா இதோ இருக்கிறாரே, இந்தப்பிரபு வீட்டில் இன்று ஆறு மணிக்கு ஒரு விருந்து நடக்கப் போகிறது. அதற்கு நீயும் வரவேண்டுமாம். வா, வண்டியில் ஏறிக்கொள்” என்றார் அரசர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/20&oldid=500574" இலிருந்து மீள்விக்கப்பட்டது