பக்கம்:வேட்டை நாய்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வேட்டை நாய்


அவன் ஒரு கைதி!

ஆம், கைதிதான்! ஆனால், அவன் எதற்காகக் கைது செய்யப்பட்டான்?

கொள்ளை அடித்ததற்காகவா?

இல்லை.

கொலை செய்ததற்காகவா?

அதுவும் இல்லை.

அப்படியானால் அவன் யாரையாவது கொலை செய்ய முயன்றானோ?

அதெல்லாம் ஒன்றுமில்லை.

அப்படியானால், எதற்காக அவனைக் கைது செய்தார்கள்?

அவனுக்கு அரசரின் போக்கு பிடிக்க வில்லை. அரசன் செய்துவரும் கொடுமைகளை அவன் பகிரங்கமாகப் பேசினான். கொடுங்கோல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று மக்களிடம் கூறினான்.

இதனால்தன் அவன் இப்போது கைதியாக நிற்கிறான். ‘ராஜத் துரோகி’ என்று அவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அரசன் முன் அவனைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அரசன் அவனைப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/30&oldid=500585" இலிருந்து மீள்விக்கப்பட்டது