பக்கம்:வேட்டை நாய்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபூர்வ நண்பர்கள்

31

 “தண்டனை விதித்தது விதித்ததுதான்! கடவுளே நேரில் வந்தாலும் மாற்ற முடியாது. ஆனால் , ஒன்று மட்டும் செய்யலாம். இறப்பதற்கு முன்னால் உன் நண்பனுக்கு விருப்பமானதைக் கேட்கச் சொல். முடியுமானல் தருகிறேன்.”

இதைக் கேட்டதும் கைதி அரசனைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்

“எனக்கு இப்போது ஒரே ஓர் ஆசைதான் இருக்கிறது. சாவதற்கு நான் பயப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னால் ஊருக்குச் சென்று ஒரு தடவையாவது என் அருமைத் தாயையும், அன்புத் தந்தையையும் பார்த்துவிட்டு வரவேண்டும்.”

இதைக் கேட்டதும் அரசன் உரக்கச் சிரிக்க ஆரம்பித்தான்.

“விட்டுக்குப் போகிறானாம்! அப்புறம் திரும்பி வங்து உயிரைக் கொடுக்கிறானாம்! என்னே ஏமாளி என்று நினைத்து விட்டாயா? உன்னை இவ்வளவு கஷ்டப்பட்டுப் பிடித்து வந்தது எதற்காக? திரும்பவும் உன் இஷ்டம்போல் விடுவதற்காகவா?”

“இல்லை, இல்லை. என் பேச்சை நம்புங்கள் அரசே, நிச்சயம் வந்துவிடுவேன்.”

“என்ன! எதிரியை நம்புவதா ஒரு நாளும் முடியாது.”

அரசன் இப்படிக் கூறியதும், கைதியின் நண்பன், “அரசே, அவனை நம்புங்கள். இந்த வேண்டுகோளையாவது பூர்த்தி செய்யுங்கள். என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/33&oldid=502476" இலிருந்து மீள்விக்கப்பட்டது