பக்கம்:வேட்டை நாய்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபூர்வ நண்பர்கள்

33


“அரசே, என் நண்பனை நீங்கள் நம்பலாம். நிச்சயம் திரும்பி வந்துவிடுவான்."

“வந்துவிடுவான், வந்துவிடுவான் என்று சொல்லிவிட்டால் போதுமா? அவன் திரும்பி வராவிட்டால்...? அவனுக்குப் பதிலாக நீ உயிரைக் கொடுக்கத் தயாரா?”

"ஓ! நான் தயார்! என்னைத் தூக்கிலிடுங்கள். அருமை நண்பனுக்காக இந்த அற்ப உயிரை விட நான் என்றும் தயாராயிருக்கிறேன்.”

“சும்மா சொல்லிவிட்டால் போதுமா? நான் உன் நண்பனுக்கு 21 நாள் தவணை கொடுக்கிறேன். அந்த 21 நாட்களும் அவனுக்குப் பதிலாக நீ சிறையில் இருக்க வேண்டும். இருபத்து ஒராவது நாள் காலை சூரிய உதயத்திற்குள் உன் நண்பன் திரும்பி வராவிட்டால், நீ தூக்குமேடையில் தொங்க வேண்டியதுதான். சம்மதமா?”

இதைக் கேட்டதும், வந்தவன் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தோன்றியது.

“அரசே, சம்மதம். என்னைக் கைது செய்யுங்கள். என் நண்பனுக்கு அனுமதி கொடுங்கள்.”

இதைக் கேட்டதும், அரசன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். சிறிதுநேரம் அப்படியே அசையாமல் இருந்தான்.

பிறகு, “உம்......சரி, அப்படியே ஆகட்டும்” என்று உத்தரவிட்டான்.

அப்போது கைதி தன் நண்டனை நன்றியுடன் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/35&oldid=502478" இலிருந்து மீள்விக்கப்பட்டது