பக்கம்:வேட்டை நாய்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்தாவது படகோட்டி

45

 என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஆம். அதோ பார், அங்கே நெருப்பு ‘குபு குபு’ என்று எரிந்து கொண்டிருப்பதை! அந்த உஷ்ணம் உன்மேல் படுகிறது. அதனால்தான் இந்தக் குளிரிலும் இவ்வளவு தைரியமாக நீ உள்ளே இருக்கிறாய்” என்று கூறினார், கொப்பாட்டும். உடனே எல்லோரும் அந்தப் பக்கம் பார்த்தனர். அரை மைல் தூரத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

செம்படவர்கள் மீன் பிடிக்கப் போவதற்கு முன்னால் குளிர் காய்வது வழக்கம். மட்டைகளையும், இலைகளையும் வைத்து எரிப்பார்கள். அதைப் பார்த்துவிட்டுத்தான் கொப்பாட்டும் அப்படிக் கூறினர்.

உடனே, பத்தாவது படகோட்டி, “இது என்ன எஜமான், நீங்கள் சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறதே! நெருப்பு எங்கோ எரிகிறது; நான் இங்கே இருக்கிறேன்! எப்படி அந்த உஷ்ணம் என்மேல் படும்?” என்றான்.

“அதெல்லாம் இல்லை. அந்த உஷ்ணம் உன் மேல் படுவதால்தான், உன்னால் இந்த நேரத்திலும் இப்படி இருக்க முடிகிறது. இல்லாவிட்டால்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/47&oldid=502562" இலிருந்து மீள்விக்கப்பட்டது