பக்கம்:வேட்டை நாய்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வேட்டை நாய்


ஹாஸனின் மனைவி பாத்திமா.

ஹாஸனும், பாத்திமாவும் எப்பொழுது பார்த்தாலும் பணம், பணம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார்கள். இந்த உலகத்திலுள்ள செல்வத்தை யெல்லாம் கொண்டுவந்து அவர்களுக்குக் கொடுத்தால்கூட அவர்களின் ஆசை தீராது. அவ்வளவு பேராசை !

ஹாஸனுக்கு அரண்மனையில் வேலை. அரண்மனை வேலை என்றால் என்ன? மந்திரி வேலையா? இல்லை; எடுபிடிவேலைதான் ஆனாலும், அவனுக்கு நல்ல சம்பளம் கிடைத்து வந்தது. எவ்வளவு சம்பளம் கிடைத்தால்தான் என்ன, அந்தப் பணத்தில் பைசா செலவிடுவதானாலும், ஹாஸனுக்கோ, பாத்திமாவுக்கோ மனம் வராது. எந்த எந்த வழிகளில் மிச்சம் பிடிக்கலாம்; எப்படி எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்பதைப் பற்றியே அவர்கள் அடிக்கடி யோசனை செய்வார்கள். நல்ல சாப்பாடு சாப்பிடமாட்டார்கள்; நல்ல உடை உடுத்தமாட்டார்கள். எப்பொழுது பார்த்தாலும், பிச்சைக்காரர்கள் போலவே காட்சி அளிப்பார்கள்.

இப்படியே அவர்கள் மிச்சம் பிடித்து ஒரு பானை நிறையப் பணம் சேர்த்துவிட்டார்கள். ஒரு பானை நிறையப் பணம் சேர்த்துவிட்டால் போதுமா? இன்னும் மூன்று பானைகள் வீட்டிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/52&oldid=502579" இலிருந்து மீள்விக்கப்பட்டது