பக்கம்:வேட்டை நாய்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணத்தின் மகிமை

51



இருக்கின்றனவே! அவைகளையும் பணத்தால் நிரப்பிவிடவேண்டுமென்று ஆசைப்பட்டார்கள், ஹாஸனும் பாத்திமாவும். அதற்கு வழி என்ன? இருவரும் யோசனை செய்தார்கள்.

அன்று ஹாஸனுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே, “பாத்திமா! நான் ஒரு யோசனை சொல்கிறேன். அதுபோல் செய்கிறாயா?” என்று கேட்டான்.

பாத்திமா ‘மாட்டேன்’ என்றா சொல்லுவாள்? “என்ன யோசனை? சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று ஆவலோடு கேட்டாள்.

உடனே ஹாஸன் சொல்ல ஆரம்பித்தான்: “பாத்திமா நீ கடைத் தெருவுக்குப் போகவேண்டும். போகும்போதே தலையை விரித்துப் போட்டுக்கொள். கண்களிலே கண்ணிரை வர வழைத்துக்கொள். அங்குள்ள கடைக்காரர் ஒவ்வொருவரிடமும் சென்று, ஐயா, என்னுடைய தலைவிதி இப்படியா ஆகவேண்டும்? என் கணவனை அரசர் விசாரணை எதுவும் இல்லாமல் சிறையில் போட்டுவிட்டார். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நான் திண்டாடுகிறேன். நீங்கள்தான் ஏதாவது உதவி செய்யவேண்டும்’ என்று கெஞ்சிக் கேள். நிச்சயம் அவர்கள் உனக்கு ஆகாரமும் பணமும் தருவார்கள். ஆகாரத்தை இருவரும் சாப்பிடலாம். பணத்தைப் பானையில் போட்டு வைக்கலாம். எப்படி என் யோசனை?” என்று கேட்டான்.

“ஆஹா! அற்புதமான யோசனைதான்... ஆனால், அவர்கள் உங்களை நேரில் பார்த்து விட்டால்...?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/53&oldid=502581" இலிருந்து மீள்விக்கப்பட்டது