பக்கம்:வேட்டை நாய்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வேட்டை நாய்

 “அதைப் பற்றிக் கவலைப்படாதே நான் கோழி கூவும் முன்பே அரண்மனைக்குப் போய் விடுவேன். கடைகளெல்லாம் மூடிய பிறகே வீடு திரும்புவேன். அரண்மனையில் இருப்பவர்களைத் தவிர மற்ற எவருடைய கண்களிலும் நான் தென்படமாட்டேன்.”

“சரி, அப்படியே செய்யலாம். நாளையிலிருந்தே நான் இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறேன்” என்றாள் பாத்திமா.

அப்படியே ஆரம்பித்து விட்டாள். தலைவிரி கோலத்துடனும், நீர் வழியும் கண்களுடனும் ஒவ்வொரு கடையாகச் சென்றாள். ஹாஸன் சொல்லிக் கொடுத்தது போலவே புளுகினாள். கடைக்காரர்கள் அவளுடைய புளுகை உண்மையென்றே நம்பிவிட்டார்கள்; இரக்கம் காட்டினார்கள்; உணவு, உடை, பணம் முதலியவற்றைக் கொடுத்து உதவினார்கள். அன்று வீடு திரும்பும் போது பாத்திமாவுக்கு அளவில்லாத ஆனந்தம்.

ஊர் அடங்கிய பிறகு வீடுவந்து சேர்ந்தான், ஹாஸன். பாத்திமா சம்பாதித்து வந்திருந்த உணவு, உடை, பணம் முதலியவற்றைக் கண்டதும், அவன் பெருமகிழ்ச்சி அடைந்தான்.

மறுநாளும் பாத்திமா கடைவீதிக்குச் சென்றாள். முதல்நாள் புளுகியது போலவே புளுகினாள். அன்றும் நல்ல வருமானம் கிடைத்தது. இப்படியே தினமும் செய்துவந்தாள்.

எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படிச் செய்யமுடியும் கடைக்காரர்கள் அலுத்துப்போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/54&oldid=502582" இலிருந்து மீள்விக்கப்பட்டது