பக்கம்:வேட்டை நாய்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வேட்டை நாய்


எப்படி வாழ்க்கை நடத்துவது? சிறிது காலம் பச்சைக் காய்களையும் கிழங்குகளையும் சாப்பிட்டு வந்தார்கள். எவ்வளவு காட்கள்தான் இப்படியே காலம் தள்ள முடியும் ? பணமிருந்தும், பரதேசியைக் காட்டிலும் கேடு கெட்ட நிலையில் வாழ வேண்டியிருக்கிறதே!” என்ற உணர்ச்சி அப்போதுதான் அவர்களுக்குத் தோன்றியது. இப்படியே இருந்தால், சீக்கிரம் செத்துச் சுடுகாடு சேர வேண்டியதுதான் என்பதை அறிந்தார்கள்.

கடைசியாக அவர்கள் தங்களிடமிருந்த பொருள்களையெல்லாம் இரண்டு மூட்டைகளாகக் கட்டினார்கள். ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கி நடந்தார்கள். அரசனின் காலடியில் போய் விழுந்தார்கள்.

“அரசே! இந்தப் பொருள்களையெல்லாம் யாராவது எடுத்துக்கொள்ளட்டும். எங்களுக்கு இந்தப் பொருள்களில் எதுவுமே வேண்டாம். எங்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள். நியாயமாக உழைத்து, நியாயமாகச் சம்பாதித்து எல்லோரையும் போல் உண்டு, உடுத்து அமைதியாக வாழ்கின்றோம்” என்று கெஞ்சிக் கேட்டனர்.

அரசன் உடனே சேவகர்களை அழைத்தான். “இந்த இரண்டு மூட்டைகளையும் எடுத்துச் செல்லுங்கள். இவர்களிடம் ஏமாந்த கடைக்காரர்களிடம் ஒரு மூட்டையையும், உறவினர்களிடம் மற்றொரு மூட்டையையும் கொடுத்து விடுங்கள்” என்று உத்தரவிட்டான்.

பிறகு ஹாஸனையும் பாத்திமாவையும் பார்த்து, இப்பொழுதாவது பணத்தின் மகிமை தெரிகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/62&oldid=502610" இலிருந்து மீள்விக்கப்பட்டது