பக்கம்:வேட்டை நாய்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வேட்டை நாய்


‘கொக்கரக்கோ!’

சேவல் கூவியது.

படுக்கையில் படுத்திருந்த சிறுவன் துள்ளி எழுந்தான். ‘அம்மா! அம்மா !’ என்று அழைத்துக் கொண்டே அம்மாவின் அருகிலே ஒடினான்.

“என்னடா, என் கண்னே?” என்று அன்பாகக் கேட்டாள் அம்மா.

“அம்மா. மாமாவின் ஊருக்குப் போகப் போகிறேன். போகட்டுமா, அம்மா?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும் அம்மா புன்சிரிப்புடன், “என்ன, மாமா ஊருக்கா அடேயப்பா அது சமீபத்திலா இருக்கிறது? குறைந்தது நூறு மைலாவது இருக்குமே!” என்றாள்.

“இருக்கட்டுமே!...... அம்மா, எனக்கு மாமாவைப் பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது. மாமாவின் பிள்ளைகளைப் பற்றி அந்த வியாபாரித் தாத்தா சொன்னாரே, கேட்டாயா? அவர்களெல்லாம் ‘ஹாக்கி’ விளையாடுவதில் மிகவும் கெட்டிக்காரர்களாம். அற்புதமாக விளையாடுகிறார்களாம். எனக்கும்தான் ஹாக்கி விளையாடத் தெரியுமே! நானும் அங்கே போய் அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம் அல்லவா? எனக்கு விடை கொடுத்து அனுப்பு, அம்மா.”

“என்ன! விடை கொடுத்து அனுப்புவதா ! நீயோ சிறு பையன். இவ்வளவு தூரத்தில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/8&oldid=499310" இலிருந்து மீள்விக்கப்பட்டது