பக்கம்:வேட்டை நாய்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

7


மாமாவையும், அவருடைய குழந்தைகளையும் நீ போய்ப் பார்ப்பது என்பது சுலபமான காரியமா? வழியில் எத்தனையோ காடுகள்; மலைகள்; ஆறுகள்! அவ்வளவையும் நீ கடந்து செல்ல வேண்டும். சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறாயே!”

“என்னம்மா நீ இப்படிச் சொல்கிறாய்! நான் என்ன, கோழையா? அல்லது, கோழையான ஒரு குடும்பத்திலே பிறந்தவனா? என் அப்பாவைப் போல் நானும் ஒரு பெரிய வீரனாக வேண்டாமா?”

இதைக் கேட்டதும், அம்மாவின் கண்கள் கலங்கின. அதே சமயத்தில், மகனின் வீர வார்த்தைகள் அவளுக்கு இன்பத்தைக் கொடுத்தன.

“ஆமாம், நீ போகிறேன் என்கிறாயே! நீ மட்டும் தனியாகவா போகப்போகிறாய்? துணை வேண்டாமா?”

“துணையா! எதற்கு அம்மா? யாருமே என்னுடன் வரவேண்டாம். நான் மட்டுமே செல்லப் போகிறேன். என் அப்பாவைப்போல் நானும் வீரணாக வேண்டாமா? அதற்கு நல்ல அனுபவம் வேண்டாமா? எந்தத் திசையில் போகவேண்டும் என்பதை மட்டும் சொல்லிவிடு, நான் இன்றே புறப்பட்டுப் போகிறேன்.”

“என்ன! இன்றே புறப்படப் போகிறாயா? அவசரப்படாதே! அந்த வியாபாரித் தாத்தா சொன்னது முழுவதையும் கேட்டாயா? உன் மாமா கூடிய சீக்கிரத்தில் இங்கு வரப் போகிறா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/9&oldid=499311" இலிருந்து மீள்விக்கப்பட்டது