பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வேண்டும் விடுதலை

சிந்தாமணி வழியே மீண்டும் மேலரண் சாலையை அடைந்து ஏறத்தாழப் பகல் 1230 மணிக்குத் தேவர் மன்றத்தை அடைந்தது ஊர்வலம் கடந்த மொத்தத் தொலைவு ஏறத்தாழ 12 கல்! தேவர் மன்றத்தின் வாயிலை அடைந்ததும் "தாய்மொழித் தமிழைத் தவறின்றிப் பேசுங்கள்” முதல் “தமிழப்பெரு நிலத்தை விடுவிக்க வாரீர்!” ஈறாகவுள்ள இருபத்தைந்து முழக்கங்களும் வரிசையாய் ஒவ்வொன்றாய் முழக்கப்பெற்றன. பின் அனைவரும் நன்பகல் உணவுக்காகக் கலைந்து சென்றனர்.

பிற்பகல் 2 மணியளவில் செல்வி மா. தேன்மொழியின் தமிழ் வணக்கப் பாடலுடன் குமுகாய மாநாடு தொடங்கியது. மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் செயலர் புலவர் இறைக்குருவனார், தமிழ்மறவர் புலவர் வை. பொன்னம்பலனார், கோவை மாவட்ட தி. க. தலைவர் கசுத்துளரி, ‘கைகாட்டி' ஆசிரியர், திரு. தமிழ்க்குடிமகனார் முதலியோர் மேடையிலும் , அதற்கண்மையிலும் அமர்ந்திருந்தனர். மாநாட்டிற்கு வருவதாகத் தெரிவித்திருந்த பர். சி. இலக்குவனாரும், புலவர் குழந்தையும் என்ன கரணியத்தாலோ வரவில்லை. முதலில் மாநாட்டரங்கில் ஏறத்தாழ இருநூற்றுவர் கூடியிருந்தனர். பின் அன்பர்களும் பொதுமக்களும் வரத் தொடங்கினர். மாநாட்டினுள் தென்மொழி , தமிழ்ச்சிட்டுப் பழைய இதழ்களும் தென்மொழி வெளியீட்டு நூல்களும், புன்செய்ப்புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றத்தார் வழிப் பாவாணர் நூல்களும், திருவாரூர் இயற்றமிழ் பயிற்றகத்தாரின் நூளும் விற்பனைக்குக் வேண்டுவரப் பெற்றிருந்தன.

தமிழ் வணக்கப் பாடல் முடிந்ததும் மாநாட்டு அமைப்பாளர் எழுந்து காலையில் நடந்த ஊர்வலச் சிறப்புப் பற்றிச் சொன்னார்கள் எந்த நடவடிக்கைக்கும் அஞ்சாமல் துணிந்து மாநாட்டிற்கு வந்த அன்பர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள். பின் மாநாட்டிற்குத் தலைமை தாங்க அங்கு வந்திருந்தவருள் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முற்பட்டார்கள். எவருடைய துணையுமின்றி, எவரையும் எதிர்பாராமல், தம் ஊரினின்று தனியராய்த் தாம் ஒருவரே வந்த அன்பர்களை மேடைக்கு அழைத்தார்கள். நான்கைந்து பேர் வந்தனர். அவருள் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து ‘தென்மொழி’ படித்துவரும் அன்பரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஒவ்வொரு வரையும் வினவினார்கள். அவர்கள் விடையிறுக்கையில் மதுரையினின்று வந்த திரு. இராச சேகரன் என்னும் கல்லூரி இறுதியாண்டு