பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

115

நேரடியாய் மறித்தும் சூழ்ந்தும் எச்சரித்தும் விட்டுவிட்டோ தொடர்ந்தோ போராடிப் பயன் கிடைக்குமாறு செய்யப்பெறும்.

ஆ) போராட்டப் பயன் பாராட்டப் பெறும் பயனின்மை அடுத்த புரட்சிக் காலத்திலும் செயன்மையைத் தொடரச் செய்யும்.

கா. குமுகாயம்:-

அ) இதற்கும் மொழிநிலைப் போராட்ட முறையே பின்பற்றப் பெறும்.

ஆ) இத்துறையினும் போராட்டப் பயன் பாராட்டப்பெறும். பயனின்மை அடுத்த புரட்சிக்காலத்தினும் செயன்மையைத் தொடரச் செய்யும்.

கி. அரசியல்:

அ) கொள்கை முழக்குடன் இயக்கத்தின் அவ்வப்பொழுதைய வகுபாட்டுக் கிணங்கவும் ஐவர் ஐவராகவோ கூட்டங் கூட்டமாகவோ நடுவணரசு ஆட்சி அலுவலகங்கள் முன் நேரடியாகப் பணி செய்ய வருவாரை மறித்தும், சூழ்ந்தும், எச்சரித்தும் விட்டுவிட்டோ தொடர்ந்தோ, போராடியோர் சிறைப்பட்ட வழியும், சிதைக்கப்பட்ட வழியும் அடுத்தடுத்தோ போராட்டம் நிகழ்த்தப் பெறும். நடுவணரசுத் தொடர்புடைய நிலத்துறை, வான்துறை, ஆகிய இயக்கங்கள் போக்கு வரத்துகள் தடை செய்யப் பெறுவதும் போராட்டத்தின் ஒரு பகுதி.

ஆ) போராட்டப் பயன் பாராட்ட பெறும்ப் பயனின்மை அடுத்த புரட்சிக் காலத்தினும் செயன்மையைத் தொடரச் செய்யும்

ஈ) இப்போராட்டக் காலத்து வேந்தம் தன் அகவியக்கத்தை நிறுத்திப் புறவியக்கத்துப் பெரிதும் செயல்படும்.

III. புரட்சிக்காலம் (Period of Revolution)

அ) மொழியுட் குமுகாயமும், குமுகாயத்துள் அரசியலும் அடக்கப் பெற்று முத்துறைப் புரட்சியும் ஒரு துறைப் புரட்சியாக வெடிக்கும்.

ஆ) சமய. குல நிறுவனங்கள் தகர்க்கப்பெறும், நடுவணரசு அலுவலகங்கள், வாணிக நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் பட்டாளப் பாசறைகள் முதலியன தீ வைத்துக் கொளுத்தப் பெறும்