பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

151

தான் எனக்கும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று முதலியவை மிகுதியும் உண்டு” என்று பெருமையடித்துக் கொள்பவர்களும் கூட அங்கு வந்துவிட்டார்கள் என்றே கருத வேண்டியிருந்தது. அத்தகையவர்கள் எந்தக் கட்சியிலும் உண்டு. இன்னுஞ் சொன்னால், தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சியிலும் இருக்கின்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும் அப்படிப்பட்டவர்களே! இவர்களை வைத்துக் கொண்டுதான் எந்தக் கட்சியாலும் எந்தவகை வினைப்பாட்டையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. அண்ணா அவர்கள் திராவிட நாட்டுப் பிரிவினையைக் கை நெகிழ விட்டதற்கும், பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தைத் தொடங்காமல் வெறும் இராமர் சீதைகளை வைத்துக் கொண்டு கூட்டங்களை மட்டும் நடத்திக் கொண்டிருப்பதற்கும். தி.மு.க. தன்னாட்சி என்று மழுப்பிக் கொண்டிருப்பதற்கும், இவ்வகை உறுப்பினர்களின் தக்கை நிலைகள்தாம் அடிப்படைக் ராணியங்கள். ஆனாலும் தென்மொழி மறவர்களில் இப்படிப்பட்டவர்களைப் பெரும்பாலும் நாம் எதிர்ப்பார்க்கவில்லை.

தென்மொழி, ஈடுபாடுடையவர்கள் என்றாலே அவர்களுக்கு ஒரு தனி நிலை உண்டு. அவர்கள் உறுதியான கொள்கைப் பிடித்தம் உடையவர்களாக இருப்பார்கள். தெளிந்த அறிவுணர்வுடையவர்களாக இருப்பார்கள்; செயலில் துணிவும் முனைப்பும் உடையவர்கள் அவர்கள் பொருள் நிலைத் தொல்லைகளால் சிற்சில நேரங்களில். அவர்கள் சிறிது சோர்வடைந்திருந்தாலும், தங்களைத் தாங்களே தூக்கி நிறுத்திக் கொள்ளும் தன்னாற்றல் உடையவர்கள். தென்மொழி மறவர்கள். எனவேதான் பொதுவுடைமைக் கொள்கையினர் தம் கட்சிக்காக வீசும் வலைகளைத் தென்மொழி வயல்களில் வீசுகின்றனர்.

முன்பு தீவிரத் தென்மொழி ஈடுபாடுடையவர்களாக விருந்தவர்களில் சிலர் அல்லது பலர் இக்கால் பொதுவுடைமையியக்கங்களில் ஈடுபாடுடையவர்களாக இருப்பதை நாம் பார்க்கத்தான் செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு போனதற்குத் தென்மொழிக் கொள்கையில் உள்ள குறைபாடு கரணியமன்று: பொதுவுடைமைக் கொள்கையில் உள்ள கவர்ச்சியே கரணியமாகும். தென்மொழி வயலில் எருவாக வேண்டிய நிலையை அவர்கள் விரும்பாது பொதுவுடைமை வயலில் பயிராகத் திகழும் நிலையை அவர்கள் வரவேற்கின்றார்கள். மற்றப்படி உலக அறிவெல்லாம் அவர்கள் மூளைகளில் வந்துவிட்ட தென்றோ, இருக்கின்ற