பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

235


 
இந்தியாவில் அமைதியின்மைக்கு
இந்திய அரசே காரணம்!....


க்களின் உண்மையான எழுச்சிக்குக் காரணத்தை விளங்கிக் கொள்ளாமலும், அக்காரன நீக்கத்திற்குரிய வழியைப் பின்பற்றாமலும், எந்த ஓர் அரசாலும் மக்கள் கிளர்ச்சிகளை அடக்கிவிட முடியாது. “அடங்கியிருப்பவர்களே மக்கள்! அடங்காதவர்கள் வன்முறையாளர்கள்’ தீவிரக்காரர்கள், கொடுமைக்காரர்கள்” என்றெல்லாம் குறைத்துப் பேசி, இழித்துப் பேசி மக்கள் கோரிக்கையாளர்களை ஒழித்துவிடலாம் என்று கனவு காண்பது அறியாமை. விடுதலைக்காகப் போராடி மக்களாட்சியை அமைத்தவர்கள், மக்கள் உரிமைகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! இப்பொழுதுள்ள ஆட்சியாளர்கள் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருப்பதற்கு, உரிமைக்காகப் போராடியவர்கள் வேறாகவும், ஆட்சியில் உள்ளவர்கள் வேறாகவும் இருப்பதே காரணம். பெற்றவளுக்கே குழந்தையின் மீது பாசமும் பரிவும் ஏற்படும். பெறாதவளுக்கு அவை எங்கிருந்து வரும்? இராசீவ்காந்தி அரசு அதிகார மமதையால் கிளர்ந்து வரும் தேசிய இன எழுச்சிகளை ஒடுக்கத் தொடங்குவதும் அத்தகையதே!

வெறும் அழகுச் சொற்களாலும் கவர்ச்சி அரசியலாலும் மக்களை அமைதிப்படுத்திவிட முடியாது. இந்திய அரசு இப்போது கடைப்பிடித்து வரும் பாசிசக் கொள்கையால் மக்கள் எழுச்சிகள்