பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

வேண்டும் விடுதலை


 
தமிழை விரும்புங்கள்! தமிழரை நேசியுங்கள்!
தமிழ்நாட்டுப்பற்றுக் கொள்ளுங்கள்!


ம் அரும் பெறல் தாய் மொழியாம் தமிழ் மொழி உலக மொழிகளிலெல்லாம் இனியது; எழில் மிக்கது; மிகப் பழைமையானது; முதன்மையானது; மூத்தது; தாய் போன்றது; இலக்கண இலக்கியச் செறிவு மிக்கது; உயிரோட்டமுள்ளது; உணர்வு சான்றது; அறிவு நிரம்பியது; மெய்யறிவு கால் கொண்டது; பண்பாடு மிகுந்தது; பயனுடையது; அறிவியல் மூலங்கள் கொண்டது; அழியாது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் தகைமை சான்றது, இவ்வாறு இன்னும் இதன் சிறப்பியல்புகளை மேன்மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், இன்று இத்தன்மைகளெல்லாம் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. உண்மையான தமிழ்த் தேசியத் தன்மைகளை, பொய்யான இந்தியத் தேசியக் கற்பனைக் கருத்துகளாலும், தேசிய ஒருமைப்பாடு என்னும் நடைபெறாத செயற்கை உணர்வாலும் மூடி மறைத்து அழிக்கப்பார்க்கின்றது தில்லியரசு. இதற்கு நம்மவர்களும் துணை போகிறார்க்ள்.

நம் தாய்மொழி உணர்வைத் தவறு என்கிறார்கள். தாய் மொழியாகிய தமிழ்ப்பற்று என்றாலே முகஞ்சுழிக்கிறார்கள். தாய் மொழியில் பேசுவதையே வெறி என்கின்றனர்! இன்னும் தூய தமிழில் பேசுவதை எழுதுவதை 'வன்முறை' என்பது போல்