பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

303


 
முன்பு போல் ஆட்சி கவிழ்க்கப்பட்டால்,
அடுத்து நடப்பது வேறு!


ந்திய நாட்டில் பெயருக்குத்தான் குடிநாயக (சனநாயக) அரசு என்று சொல்லப்பெறுகிறதே தவிர, நடப்பதெல்லாம் முதலாளிய- வல்லதிகார அனைத்ததிகார(சர்வாதிகார)ப் பார்ப்பனிய ஆட்சிதான் என்பது அனைவருமே அறிந்த ஒன்றாக இருக்கிறது. பதவியதிகாரத்தின் தலைமையிடத்தில் இருந்தாலும் சரி, அ’து எதிர்க்கட்சிக்காரர்கள் ஆள்கிற மாநிலமாக இருந்தால் அதை உடனே அழித்தொழித்துவிடவும், உடனே குடியரசுத் தலைவர் ஆட்சி என்கிற பெயரால், ஒரு பூசாரி ஆளுநரை அங்கு அனுப்பவும், அவருக்குத் துணையாகத் தங்களுக்கு வேண்டிய இரண்டு மூன்று பார்ப்பனச் செயலாளர்களை அமர்த்திக் கொள்ளவும்; அடுத்துத் தங்களுக்குப் பிடித்தமான, வாய்ப்பான ஒர் ஆட்சிச் சூழ்நிலையைத் தங்கள் பணவலிவால் உருவாக்கிக் கொள்ளவும் இந்த நாட்டில் முடிகிறதென்றால், இங்கு நடப்பதைக் குடிநாயகம் (சனநாயகம்) என்பதை எவருமே ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

இந்திரா காலத்தில் இவ்வாறு கவிழ்க்கப்பட்ட மாநில அரசுகள் ஏராளம். 1975 -இல் தமிழ்நாடு அரசு (கலைஞர் ஆட்சி) அதற்கு முதற்பலியானது. பின்னர் 1980 -இல் சரத்பவார் முதலமைச்சராகவிருந்த மகாராட்டிரம், பிரகாசு சிங் தலைமை தாங்கிய பஞ்சாப், சுந்தர்லால் பட்வா முதலமைச்சராக இருந்த நடுவண் பைதிரம் (மத்தியப் பிரதேசம்), நீலமணி ரவுத்திரி முதலமைச்சராக ஆண்ட ஒரிசா,