பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/345

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

343



 
எளிதாகத் தீர்க்கப்பட வேண்டிய காவிரி நீர்ச் சிக்கலை
இனச் சிக்கலாக மாற்றி விட்டார் பங்காரப்பா...!


இனி, தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால்தான் தமிழர்கள் வாழமுடியும்


(6.1.92 'சத்ரியன்’ இதழ்க்கு அளித்த
நேருரையில் பாவலரேறு!)

மிழர்களும் தமிழ்நாடும் எந்த வகையிலும் வளம் பெறவும் கூடாது. முன்னேறி விடவும் கூடாது என்பதுதான் இப்பொழுதைய தில்லி அரசின் எண்ணமாகும்.

பார்ப்பனீயமும் முதலாளியமும் சேர்ந்து இயங்குவதே தில்லி ஆட்சி. அதற்கு இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும், எந்தத் தேசிய இனமும் எந்த நிலையிலும் வலுப்பெற்றுவிடக் கூடாது என்பதே உட்கருத்தாகும்.

அவ்வாறு வலுப்பெறுமானால் அந்த மாநிலமும் அந்தத் தேசிய இனமும் தன் அதிகாரக் கட்டுக்குள் இல்லாமற் போய்விடுமே. என்பதுவே தில்லியரசின் கவலை கரவான எண்ணம்..!

இதற்கு உகந்தவராக, தில்லி அரசுக்கு, அஃதாவது இந்திரா பேராய (காங்கிரசு)க் கட்சிக்குக் கிடைத்தவர்தாம் பங்காரப்பா..!

இவர் 1990 அத்தோபரில், வீரேந்திர பாட்டீல் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர். எல்லா நிலைகளிலும் இவர்