பக்கம்:வேத வித்து.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென் உக்கிரம் உடம்பெல்லாம் வியர்க்க, தெருப் புழுதி கால்களை கெருப்பாய்ச் சுட மஞ்சுவுக்கு என்ன ஆயிற்றோ?' என்ற கவலையில் ஒரு ஆவேசத்தோடு ஓடினான் முர்த்தி. கால்கள் கொப்பளித்து நடக்க முடியாமல் தத்தளித்த போது வைதிக சாஸ்திரி ஒருவர் சைக்கிளில் வந்து கின்றார். சாதுவாய்,ஒல்லியாய், ருத்திராட்சமாலை அணிந்திருந்தார். 'தம்பி! எங்க போயிண்டிருக்கே, இந்த கொளுத்தற வெய்யில்லரி கல்யாண வீட்ல பார்த்தனே உன்னை ' என்றார். "பெரிய ஆஸ்பத்திரிக்குப் போறேன். அங்க ஒருத்தரைப் பார்க்கனும்' என்றான் முர்த்தி. "ஏறிக்கோ பின்னால. நான் கொண்டு விட்டுடறேன்' என்றார். - - மூர்த்தி தயங்கியபடி வேணாம், பெரியவாளுக்கு சிரமம்' என்றான். "பரவாயில்ல, ஏறிக்கோ.' ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார். 'உங்க உதவியை மறக்க மாட்டேன்' என்று கூறி நன்றியோடு நமஸ்கரித்தான். 111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/114&oldid=918612" இலிருந்து மீள்விக்கப்பட்டது