ஆஸ்பத்திரி வராந்தா பெஞ்ச்சில் மஞ்சுவின் தகப்பன் கவலையே உருவாக உட்கார்ந்திருந்தான்.மூர்த்தியைக் கண்டதும் துக்கம் பீறிட அழ ஆரம்பித்து விட்ட்ான். 'அழாதீங்க. மஞ்சு எப்படி இருக்கா?" "என்னை இங்கயே உட்காரச் சொல்லிட்டு உள்ளே தூக்கிட்டு போனாங்க. ரொம்ப நேரமாச்சு. ஒண்னுமே சொல்ல மாட்டேங்கறாங்க." "இங்கயே இருங்க. கான் போய்ப் பார்த்துட்டு வரேன்' என்று ஓடினான். எமர்ஜன்ஸி வார்டுக்குப் போய் கட்டில் கட்டிலாக மஞ்சுவைத் தேடினான். - குறுக்கே வந்த கர்ஸ் ஒருத்தி 'யாரைத் தேடுது தம்பி? என்று கேட்டாள். * 'வயத்துலே கத்தி பாஞ்சுட்டுதே...' "ஓ, அந்தக் கேஸா? ஆபரேஷன் தியேட்டர்ல இருக்குது. தையல் போட்டுக்கிட்டிருக்காங்க. கத்தி ஆழமாப் பாஞ்சிருக்கு. கொஞ்ச நேரத்துல ஸ்ட்ரெச்சர்ல கொண்டு வருவாங்க... வெய்ட் பண்ணு.' - 'உயிருக்கு ஆபத்து இல்லையே? பிழைச்சுடுவளா?" 'பெரிய டாக்டர் வருவார். கேளு.ை' காத்திருந்த சில நிமிடங்கள் சில யுகங்களாய் நீண்டன. கடைசியில், மஞ்சுவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்து ஏழாம் கம்பர் கட்டிலில் கிடத்தினார்கள். அவள் கண்களை மூடி மயக்க நிலையில் இருந்தாள். டாக்டர்கள் மூன்று பேர் பின் தொடர்ந்து வந்தார்கள். 'பயமில்லையே டாக்டர்' என்று பெரிய டாக்டரை அணுகிக் கேட்டான் மூர்த்தி. 112
பக்கம்:வேத வித்து.pdf/115
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf/page115-750px-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf.jpg)